திட்டக்குடி அருகே பொதுமக்களுக்குக்கு கபசுரகுடிநீர்
திட்டக்குடி அருகே பொதுமக்களுக்குக்கு கபசுரகுடிநீர் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வே.கணேசன் வழங்கினார்
உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்காரணமாக கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி மங்களுர் ஒன்றியம் ஈ.கீரனூர் ஊராட்சியில் கொரோணா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்குக்கு கபசுரகுடிநீர் வழங்கும் பணியை கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டகுடி சட்டமன்ற உறுப்பினருமான சி.வெ.கணேசன் மேற்கொண்டார்
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது உடன் மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் செல்லையா மற்றும் கழக முன்னோடிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்
செய்தியாளர் கடலூர் காமராஜ்
Comments