நமது தலைக்குள்ளிருக்கும் மூளை குறித்த சில தகவல்கள்

நமது தலைக்குள்ளிருக்கும் மூளை குறித்த சில தகவல்கள்



  • உலகிலே உள்ள உயிரினங்களிலேயே மனித மூளைதான் மிகவும் புத்திகூர்மை கொண்டது. 

  • மனிதர்களின் வாழ்க்கையில் 2 வயதில்தான் மூளை செல்கள் அதிகமாக இருக்கின்றன.


அதே நேரம், மனித மூளை முதிர்ச்சி அடைய 20 ஆண்டுகள் தேவைப்படுகின்றன.



  • கருவறையில் வளரும் குழந்தையின் மூளையில் ஒவ்வொரு விநாடியும் 8,000 புதிய மூளை செல்கள் வளர்கின்றன.  பிறந்த சில மணி நேரத்திலேயே தாயின் முகத்தை பார்த்து / கண்டு உணர்ந்துகொள்ளும் திறன், பிறக்கும் குழந்தைக்கு உண்டு. 

  • மனித மூளையில் 60 சதவீதம் கொழுப்பு இருக்கிது என்றாலும் அது கடுமையாக வேலை செய்கிறது.

  • நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது நம் உடலில் உள்ள மொத்த சக்தியில் 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. 

  • மூளை 25 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.  இதன் மூலம் ஒரு மின் விளக்கையே எரிக்க முடியும்.

  • குழந்தை பிறந்தது முதல் இறக்கும்வரை  மூளை  ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டே இருக்கிறது. 

  • உண்மையில் தூங்கும்போதுதான் மூளை அதிகமாக வேலை செய்கிறதாம்.

  • ஒரு மனித மூளைக்குள் ஒரு நாளில் சராசரியாக 70,000 எண்ணங்கள் ஓடுகின்றன. 

  • மனித மூளை என்பது சராசரியாக 1,230 கிராம்  ஒரு கிலோ 200 கிராம்) எடை கொண்டது.

  • ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவுதான்.

  • தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.

  • இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம். மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால்தான் கட்டுப்படுத்தப் படுகிறது என்று நம்பினார்கள். ஆனால் உண்மையில் கட்டுப்படுத்துவது மூளைதான்.

  • மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிக்ஞைகளை அறிந்து கொள்ளும்.

  • மனித மூளை என்ற உறுப்புக்கு நேரடியாக வலியை அறியும் உணர்வு இல்லை.  அதனால் ஒரு மனிதர் விழித்திருக்கும்போதே அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

  • உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.

  • நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம். அது 0.0004 நொடிகள்.

  • குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம் (….அதான் எங்களுக்கு தெரியுமே ….புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )

  • அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும்,

  • அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான அதிகாலை  3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.


   ஐன்ஸ்டீன்  மூளை



  • உலகின் மாபெரும் அறிவியல் அறிஞராகக் கருதப்படும் ஐன்ஸ்டீன், 1955ம் ஆண்டு தனது 76 ஆம் வயதில் இறந்தபோது அவரது மூளையை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, அவரது குடும்பமும் ஏற்றுக் கொண்டு, அவரது மூளை தனியே எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

  • மூளையின் முக்கிய பாகங்கள் பிராண்டல் லோப், பெரைடல் லோப், ஆக்ஸிபிடல் லோப், டெம்போரல் லோப், லிம்பிக் லோப், இன்சுலார் கார்டெக்ஸ் ஆகியவை. பிராண்டல் லோப் என்பது மூளையின் முன் பகுதி. இதுதான் நமது சிந்தனைகளின்  கூடாரம். இதில் பிரச்சனையோ, சேதமோ ஏற்பட்டால் நமது சிந்தனைகள் சிதரும். பெரைடல் லோப் பகுதியின் முக்கிய வேலை தொடு உணர்வுகளை ஒருங்கிணைப்பது. இது பிராண்டல் லோபின் பின் பக்கம் உள்ளது. ஆக்ஸிபிடல் லோப் என்பது பின் பக்க மூளையில் இருப்பது. நமக்கு பார்வைத் திறனைத் தருவது இதுதான்.

  • மூளையின் கீழ் பகுதி டெம்போரல் லோப் என்பது. இது வாசனை, கேட்கும் திறன், முக பாவனைகளைத் தருவது. மூளையின் மத்திய பகுதியில் உள்ள லிம்பிக் லோப் தான் நமக்கு நினைவாற்றல், குணநலன்களைத் தருவது. மூளையின் போர்வை போன்ற இன்சுலார் கார்டெக்ஸ் தான் வலி உள்ளிட்டவற்றை உணர வைப்பது.

  • அவரது மூளை 240 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மூளை நரம்பியல் டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், உளவியல் ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் பிரித்துத் தரப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதைப் பிரித்தவர் அப்போது மிகப் பிரபலமாக இருந்த நோய்த் தடுப்பு ஆராய்ச்சி வல்லுனரான டாக்டர் தாமஸ் ஹார்வி.

  • இந்த மூளைப் பகுதிகளில் பல காணாமல் போய்விட்டன. ஆனாலும் இந்த ஆராய்ச்சியாளர்கள் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து சமீபத்தில் ஐய்ன்ஸ்டீனின் மூளை குறித்து ஒரு சில முடிவுகளுக்கு வந்துள்ளனர்.

  • குறிப்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மனித பரிணாமம் குறித்த ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரான டீன் பால்க் தலைமையிலான குழு, ஐய்ன்ஸ்டீனின் மூளையின் சில பகுதிகளில் மிக அதிகமான மடிப்புகளும், பள்ளங்களும் (grooves) இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.

  • 85 பிற மூளைகளுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஐய்ன்ஸ்டீனின் மூளையின் எடை என்னவோ மற்றவர்களைப் போலவே சராசரி எடை கொண்டதாகவே இருந்துள்ளது. ஆனால், அதன் மடிப்புகள், முகடுகளின் (ridges) எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்துள்ளது. மேலும் ஒரு விஷயத்தை மிகக் கூர்மையாக ஆராயும் திறனையும் முன்யோசனையையும் தரும்       prefrontal cortex பகுதி ஐய்ன்ஸ்டீனின் மூளையில் கொஞ்சம் பெரிதாகவே இருந்ததும் உறுதியாகியுள்ளது.


 


தகவல்   செ.ஏ. துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி