நம்பிக்கையின் கீற்று திணைநிலவாசிகள்

நம்பிக்கையின் கீற்று!
அனாதையாகக்கிடந்த முதியவரின் உடலை, கொரோனாவுக்கு அஞ்சாமல் அடக்கம் செய்த திணைநிலவாசிகள்!


சிலநாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய எவருமே முன்வராத ஒரு அவலத்தை நாம் கண்டோம். களத்திலிருக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக கைதட்டுகிறோம், விளக்கேற்றுகிறோம் என்று போலித்தனமாக டி.விக்கு போஸ் கொடுத்துக் கொண்டாடியவர்களின் சுயரூபத்தை வெளிக்கொணர்ந்த சம்பவம் அது. இருக்கட்டும்! இது போன்ற போலித்தனமானவர்கள் எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும், எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள். இதை அறிந்தவர்களில் சிலர்   கோபப்பட்டார்கள், சிலர் கேலி செய்தார்கள், சிலர் அமைதியாகக் கடந்தார்கள்.


வெகு சிலர் நடந்தது தங்கள் இருப்பையே காட்டிக் கொள்ளாமல் சலனமற்று இருந்தார்கள். அவர்கள் யார் தெரியுமா? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலகமே கைவிட்டாலும், கடவுளே நிராகரித்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று தாமே முன்வந்து உதவக் கூடியவர்கள். 
அவர்களில் சிலர்தான் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் என்கிற நாடகக் கலைஞர்கள். இன்று அவர்கள் செய்த நற்பணி அளப்பறியது.


சென்னை செங்குன்றம் பகுதியில் 73 வயதுதக்க முதியவர் பிளாட் பாரத்தில் அனாதையாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினர் திணைநிலவாசிகளை
தொடர்பு கொண்டார்கள். திணைநிலவாசிகள் துளியும் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இன்று அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்தார்கள். 


கொரோனாவை விட நிராகரிப்பு கொடுமையானது. வறுமை, முதுமை, குடும்பத்தகராறு, மனப்பிறழ்வு என பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். 


அவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் இருக்கிறது. ஆனால் நம் அனைவருக்கும் நம்பிக்கை தரும்விதமாக சில நல் உள்ளங்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள். 


இந்த நாடும், வனமும், காடும், வானமும் இவர்களைப் போன்ற நல் உள்ளங்களால் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள். அந்த நம்பிக்கையை நமக்கு வழங்கியிருக்கும் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் நண்பர்களுக்கு நன்றி!


தன்னலம்பாராத அவர்களுக்காக எவரும் கைதட்டவோ, டார்ச்லைட் அடிக்கவோ வேண்டாம். அவர்கள் அதை எதிர்பார்க்கவுமில்லை. போலியாக நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல், எவரையும் இகழாமல்,  மனசாட்சியுடன் நேர்மையாக இருந்தாலே போதும், இந்த பூமி பிழைத்துக்கொள்ளும்!


News courtesy:திரு செல்வகுமார் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி