குருவிக்குத் தக்க ராமேஸ்வரம்
குருவிக்குத் தக்க ராமேஸ்வரம்
பழமொழிகளின் விளக்கம்
- மோதிரக் கையால் குட்டு வாங்குவது.
“மோதிரக் கையால்“ அல்ல. “மோதுகிற கையால்“, உனக்குச்
சரிசமமான அந்தஸ்து உள்ளவனிடம மோத வேண்டும் என சொல்வது. .
- சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
சோழியன் என்ற அனத்தவர் அந்தக் காலத்தில் நிறைய முடி வளர்த்து அதை குடுமி போல் முடிந்திருப்பார்களாம். தலையில் வைத்து கனமான சாமான்களைத் தூக்கி வர வேண்டியிருந்தால் துணியால் செய்த சும்மாடு ஒன்றைத் தலையில் வைத்து அதன்மேல் கனமான சாமான்களைத் தூக்கி வருவார்களாம். என்னதான் தலை நிறைய முடி இருந்தாலும், சோழியன் குடுமி “சும்மாடு ஆகுமா“ என்பதுதான் மறுவி “சும்மா ஆடுமா“ என்றாகி ஆகிவிட்டது.
- குருவிக்குத் தக்க ராமேஸ்வரம்
“குருவிக்குத் தக்க ராமேஸ்வரம்” ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
இதை குறிவைக்க + தைய்க்கும் + ராமசரம், ராமன் குறிவைத்து அம்பு எய்தால் அது குறிதவறாமல் தைக்குமாம். அதுபோல எந்த ஒரு காரியத்தையும் சரியாகத் தீர்மானித்து செய்தால் தவறாமல் நினைத்தது நடக்கும் என்பதுதான் மறுவி அர்த்தமற்றதாகத் தெரிகிறது.
செ ஏ துரைபாண்டியன்
Comments