தொடர் வண்டிகள் வாரம்

               இந்தியாவில் தொடர் வண்டிகள் வரலாற்றில் இன்றோர் முக்கியமான நாள்.  ஆனால் கோவிட் 19 என்றழைக்கப்படும் கொரானா தொற்றுக் கிருமி உலகில் பெரும்பாலான மனித உயிர்களை மட்டும் பறிக்கவில்லை.  மனித வாழ்க்கையையே பறித்து விட்டது. வாழ்வாதாரத்தைப் பறித்து விட்டது.   மனிதர்களின் நிம்மதியைப் பறித்து விட்டது, தனிமையைப் புகுத்தி விட்டது.  கொண்டாட்டங்களை முழுங்கி விட்டது. கோவில்களுக்குச் சென்று இறைவனிடம் இரைஞ்சுதலைத் தடுத்து விட்டது.  ஊரடங்கு என்ற பெயரில் மன நல பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 


                     இந்நிலையில் தொடர் வண்டிகள் வாரம் என்று ஏப்ரல் 10-லிருந்து ஏப்ரல் 16 வரை நடத்தப்பெறும் மிகப் பெரிய விழாவைப் பறித்து விட்டது.  விழா கொண்டாடும் நிலையிலா நாம் எல்லாம் இருக்கிறோம்.  விழாதான் கொண்டாடவில்லை எனினும்,      வரலாற்றின் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்த்து சிலவற்றை நினைவு    கூர்வோம்.    


                      இந்தியாவில் 1853   ஏப்ரல் 16  பிற்பகல் 3.35 மணிக்கு Great Indian Peninsula Railway யின் முதல் தொடர் வண்டி பயணிகளை சுமந்து கொண்டு  பம்பாயிலிருந்த போர் இரயில் நிலையத்தை விட்டு  தாணா இரயில் நிலையத்திற்குப் புறப்பட்டது. அந்தத் தொடர் வண்டி  21 மைல்கள் (33.8 கி. மீட்டர்) தூரத்திலிருந்த தாணா நிலையத்தை  அடைய 57 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது.  அதற்குப் பின் எவ்வளவோ மாற்றங்கள், முன்னேற்றங்கள்.      


1947-இல் நாடு விடுதலை அடைந்தபோது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. பின்னர் 1951-இல் இது நாட்டுடமையாக்கப்பட்டபோது இது உலகின் பெரிய தொடர்வண்டி அமைப்புகளில் ஒன்றாக ஆனது.


 


1909  இல் இந்திய இருப்புப் பாதைப் பிணையம்.


இந்தியாவில் இருப்புப் பாதைக்கான திட்டம் 1832ஆம் ஆண்டில் வரையப்பட்டது. 1836 இல் முதல் இருப்புப் பாதை தற்போதைய  சென்னையின்  சிந்தாதரிப்பேட்டை  பாலம்  அருகே சோதனையோட்டமாக அமைக்கப்பட்டது.  1837இல் செங்குன்றம் ஏரிக்கும் செயின்ட். தாமசு மவுண்ட்டின் (பரங்கிமலை) கற்சுரங்கங்களுக்கும் இடையே 3.5-மைல் (5.6 km) தொலைவிற்கு நிறுவப்பட்டது.   1844இல் அப்போதைய கவர்னர் ஜெனரல் என்றி ஆர்டிஞ்ச் தனியார் துறையினரும் இருப்புப் பாதைகள் அமைக்க அனுமதித்தார்.


இந்தியாவில்  நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு தொடர் வண்டிப்  போக்குவரத்தே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்  போக்கு வரத்தானது  இந்திய இரயில்வே  என்ற அரசு நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.  நாடு முழுதும் பரவியுள்ள தொடர் வண்டிப்  பாதைகள் மொத்த நீளம் 63,140  கிலோ மீட்டர்கள்  ஆகும். இது உலகின் மிகப் பெரிய இரயில் வலையமைப்புகளில் ஒன்று ஆகும்.


            இது ஆண்டொன்றுக்கு 500  கோடிக்கும்  அதிகமான மக்களையும் 


            தொடர் வண்டியையே  இதுவரை பார்க்காத ஒரு கிராம மக்கள்  சென்ற ஆண்டுதான் முதல் முறையாக தொடர் வண்டியையே பார்த்திருக்கிறார்கள்  என்பது  செய்தி. 


           


செஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி