திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைச்சர் காமராஜ் பேட்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைச்சர் காமராஜ் பேட்டி
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும், தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை இந்தியாவை பொருத்தவரை பாரத பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுத்துவருவதால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் முதல்வர் போர்க்கால அடிப்படையில் தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் மருத்துவ உதவி வழங்குவதில் உரிய நடவடிக்கை எடுத்துவருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் எல்லாம் தற்போது பயன்தருகிறது
. அம்மா உணவகம் மூலம் ஏழை, பணக்காரர்கள் என்று இல்லாமல் எல்லோரும் சாப்பிடுவதற்கான வாய்ப்பினை இந்த ஊரடங்கு உத்தரவு காலங்களில் அட்சய பாத்திரமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. ஒரே ஆண்டில் தமிழகத்தில் 11 மருத்துவகல்லூரிகளை கொண்டுவந்ததால் இன்று மருத்துவ சிகிச்சையில் முன்னிலையில் இருப்பதற்கு வாய்ப்பாக இருக்கிறது இதேபோல் தொடர்ந்து எடுத்துவரும் நடவடிக்கை மூலம் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பழகிய 2,761 பேர் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது உறுதிசெய்திருக்கிறது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் 1000 ரூபாய் பணம்,விலையில்லாத ஏப்பிரல் மாதத்திற்கான பொருட்கள் சரியாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டோக்கனோடு பணத்தையும் வழங்க முதல்வர் உத்தரவிட்ட நிலையில் நேற்று இரவு 7 மணி வரை 79.48 சதவீதம் பணம் வழங்கப்பட்டுவிட்டது
. காலை முதல் பொருட்கள் வழங்க துவங்கிவிட்டனர்.மாவட்டம் முழுவதும் இருக்கிற நரிக்குறவர்கள் கண்டறியப்பட்டு திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பாமணி, கோட்டூர் ஏரி, முத்துப்பேட்டை பகுதி, வாழ்க்கை, பெரும் பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லாமல் அதிமுக சார்பில் பொருட்கள் , மாஸ்க்குகள் உள்ளிட்டவைகள் வழங்கிவருகிறோம் என்றார்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments