குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்

               குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்'' குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்'' என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாக முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார்


. தெய்வங்களில் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் "தெய்வசிகாமணி' என்று போற்றுவர். ""கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது'' என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. நாம் அறியாமல் செய்த பிழைகளையும் முருகன் பொறுத்துக் கொள்வான். பிள்ளை என்று அன்பாய் பிரியம் காட்டுவான் என்று கந்தசஷ்டிகவசம் நமக்கு வழிகாட்டுகிறது. அதோடு மட்டுமல்லாமல் முருகனிடம், ""என்னைப் பெற்றவன் நீயே! என் பிழைகளைப் பொறுத்துக் கொள்வது உன் கடமை!'' என்று தேவராய சுவாமிகள் கவசத்தில் முருகனிடம் முறையிடுகிறார். வள்ளலார் தனது தெய்வமணிமாலையில், ""தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!'' என்று அழைக்கிறார்.


மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி