ஜாலியான்வாலா பாக் சோக நினைவுகள்
ஜாலியான்வாலா பாக் சோக நினைவுகள்
ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து இன்று ஏப்ரல் 13ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் முடிந்து விட்டன. எனினும், அதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் அந்தச் சோகத்தைச் சுமந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
ஜாலியன்வாலா பாக் யில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை நினைக்கும்போதெல்லாம் தங்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர். ஜாலியன்வாலா பாக்கில் சுடப்பட்ட லாலா ஹரி ராமின் பேரன் மகேஷ் பேகல், தனது பாட்டி ரத்தன் கௌர் தன்னிடம் பகிர்ந்துகொண்ட மோசமான நினைவுகளை நம்மிடம் வெளிப்படுத்துகிறார்.
"எனது தாத்தாவை நெஞ்சு மற்றும் காலில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுடன் வீட்டுக்கு கொண்டுவந்தபோது அவருக்கு கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. அப்போது அமிர்தசரசு நகரில் நடந்த களேபரத்தில் மருத்துவ உதவிகூடக் கிடைக்கவில்லை. நான் என் தேசத்துக்காக இறக்கிறேன். என் மகன்களும் அதே பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது கடைசி வார்த்தைகள்," என்கிறார் மகேஷ்.
என் தாத்தா மிகவும் விரும்பியதால் அவர் திரும்பி வந்ததும் உண்பதற்காக என் பாட்டி 'கீர்' ( அரிசியில் செய்யப்படும் இனிப்புச் சுவையுடைய தின்பண்டம்) சமைத்து வைத்திருந்தார். ஆனால், அதை என் தாத்தா உண்பதற்கான நேரம் வரவே இல்லை என்று கனத்த இதயத்துடன் கூறுகிறார் அவர்.
"அவரது இறப்பால் எங்கள் குடும்பம் மிகுந்த இன்னலுக்கு ஆளானது. அவர் விருப்பதைப்போலவே எங்கள் குடும்பம் அவர் மறைவுக்குப் பின்னும் அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடினோம்.
1997 இல் பிரிட்டன் ராணி எலிசபெத் இந்தியாவுக்கு வருகை தந்தபோது 'தங்கள் தவறுகளுக்கு பரிகாரம் செய்யாமல் ராணி அமிர்தசரசுக்கு வருகை தருவது வீண்' என்று பதாகைகளை ஏந்திக்கொண்டு போராடினோம்," என்று மகேஷ் கூறுகிறார்.
எஸ்.கே.முகர்ஜீ நீண்ட நாட்களாக ஜாலியன்வாலா பாக்கை பராமரித்து வருகிறார். அவரது தாத்தா துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவர்.
ராணி எலிசபெத் மற்றும் அவரது கணவர் எடின்பர்க் கோமகனின் கையெழுத்தை ஜாலியன்வாலா பாக் வருகைப் பதிவேட்டில் காட்டும் அவர், "ஒரு மன்னிப்பு எந்த அளவுக்கு காயங்களை ஆற்றும் என்று தெரியாது. ஆனால், நாம் இந்த நினைவுச் சின்னத்தை மேம்படுத்தி, இந்தியாவின் கறுப்பு நாட்களை நினைவுகூர வேண்டும்," என்கிறார்.
அது என்ன ஜாலியன்வாலாபாக் படுகொலை
அந்தப் படுகொலைகள் விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக உருவெடுத்தது.
பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹேரி டையர் உத்தரவின்பேரில், ஜாலியன்வாலாபாக்கில் வைசாகி விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி ஏந்திய 50 ராணுவத்தினர் சுடத்தொடங்கினர்.
2013இல் இந்தியா வந்திருந்த அப்போதைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அந்தப் படுகொலைகளை 'வெட்கக்கேடானது' என்று கூறினார்.
ஜாலியன்வாலாபாக் படுகொலை
1919-இல் ஏப்ரல் 13 வைசாகி நாள். அன்றுதான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, அம்ரித்சரில் இந்நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு
இதற்கு முன்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம் ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊடகங்களை (அச்சிட்ட செய்தித்தாள்கள் மட்டும்தான் அப்போது இருந்தன. மின்னணு தொலைக்காட்சி கண்டுபிடித்த ஆண்டே 1927தான்) கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது.
எனினும ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான்வாலா பாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று பெரும் கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன. கடையடைப்பு முழு அளவு வெற்றிகரமாக நடைபெற்றது. மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் தன்னிச்சையாக வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன.
இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம்தான் ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் படுகொலை.
இப்படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் பல தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன.
எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டதால் திறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆகும். அதிகாரபூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயம்பட்டவர்கள் அங்கேயே காலை வரையில் இருக்க வேண்டியதாகி விட்டது.
பிரித்தானிய அரச மதிப்பீட்டின்படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். காந்தியடிகளால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பஞ்சாபின் துணை ஆளுநர் சேர் மைக்கல் ஓ'ட்வையர் "ஜெனரல் டையரின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே" என டையருக்குத் தந்தி அனுப்பினார்.
பஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்தார். டையர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது:
“ | நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை. | ” |
வின்ஸ்டன் சர்ச்சில் 1920 சூலை 8 ஆம் தேதி இங்கிலாந்தின் ஹவுஸ் ஒப் கம்மன்சில் உரையாற்றும்போது ஜெனரல் டயர்யை பணியில் இருந்து எடுத்து விடலாம் அல்லது அவருக்குப் பணி ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறினார் என உறுதிசெய்யப்படாத ஒரு தகவல் உள்ளது.
.
அக்டோபர் 14 1919 ஆம் ஆண்டு லார்ட் விலியம் ஹன்டர் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதற்கு அவர் பெயரே வைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை மார்ச் 8, 1920 அன்று வெளியிட்டது.
அக்குழுவின் அறிக்கை விபரம் :-
- மக்கள் கலைந்து செல்ல எந்தவித அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை
- சுட்டப்பட்ட காலம் மிகவும் அதிகம் .
- டயர் நிலைமையை சரிசெய்ய அவர் கையாண்ட உத்தி தவறு மற்றும் கண்டனத்துக்கு உரியது
- டயர் அவருடைய அதிகாரத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டார்.
- பஞ்சாபில் பிரித்தானியா அரசை தூக்கி எறிவதற்கான எந்த சதி வேலைகளும் அப்போது இல்லை.
இக்குழு, இராணுவ அதிகாரி டயருக்கு எந்தத் தண்டனையும் பரிந்துரைக்கவில்லை.
இந்தப் படுகொலையில் உயிர் இழந்தோர் 379 , குண்டுக் காயம் பட்டோர் 1337 பேர் என்று ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்திய விடுதலைப் பொன்விழா ஆண்டான 1997 இல்,ஐ. கே. குஜரால் அரசால் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்ற, பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தும் அவரது கணவர் எடின்பரோவும் ஜாலியன்வாலா பாக் நினைவிடம் சென்றனர்.
- அங்கு, எடின்பரோ பலியானோர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்றார். இக்கூற்று பலராலும் விமர்சிக்கப்பட்டது.
. ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுமார் ஓராண்டுக்கு முன்னர் பிரதமர் தெரீசா மே ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
செ ஏ துரைபாண்டியன்
Comments