நாகை மாவட்டம் துணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் அவர்கள் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை
நாகை மாவட்டம் துணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் அவர்கள் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மாவட்டத்தில் சுகாதார களப்பணியாளர்கள் கொண்டும் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கொண்டும் வீடுதோறும் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதனடிப்படையில் குத்தாலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அப்துல் ஃ க் அவர்கள் தலைமையில் திருவலங்காடு சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு நோயெதிர்ப்பு கிருமிநாசினி தெளித்தும் காய்ச்சல்உள்ளதா என தர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தவபாலன், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் மாவட்ட நல்கல்வி அலுவலர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கொரோனா விழிப்புணர்வு பணியை செய்து வருகின்றனர். பீப்பிள்டுடே செய்திகளுக்காக
. கடலூர். காமராஜ்
Comments