திருத்துறைப்பூண்டி அருகே மணலி, குரும்பல் மாங்குளத்தெரு பகுதியில் தேன் குளவி கடித்ததில் 8 பேர் காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
திருத்துறைப்பூண்டி அருகே மணலி, குரும்பல் மாங்குளத்தெரு பகுதியில் தேன் குளவி கடித்ததில் 8 பேர் காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
திருத்துறைப்பூண்டி அருகே மணலி, குரும்பல் மாங்குளத்தெருவில் அருகே மூங்கில் குத்து பகுதியில் இருந்த பெரிய தேன் அடையில் இருந்து வந்த தேன் குளவிகள் வீடுகளுக்குள் நுழைந்தும், தெருவில் நின்றவர்கள் மீது திடீரென்று தாக்கி கடித்ததில் ராஜேந்திரன் (52), செந்தமிழ்ச்செல்வி (30), கவிதா(30), ரிஷி (7), கிஷோர் (11), லெனின் (28), முத்துலெட்சுமி (25), ஜெயம் (55) ஆகியோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களை திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர் நேரில் சென்று நலம் விசாரித்தார் பின்னர் சட்ட மன்ற உறுப்பினர் ஆடலரசன் MLA தீயணைப்புத்துறைக்கு தகவல்கொடுத்து குளவிகளை அழிப்பதற்கு உத்தரவிட்டார்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments