மீட்டியது சிவம் மீண்ட சிவம் (8)
மீட்டியது சிவம்
மீண்ட சிவம் (8)
ஆறுவது சினம்
ஆறாதென்ற சினமும் உளதோ
தாழ் மன வேகம்
சினம் எனும் ரோகம்
சினத்தைக் கொண்டு
சிவத்தை அகற்றி
சினத்தை போற்றி
வளர்ப்பது எதுவோ
அதுவே உந்தன்
சத்துரு வாகும்
ஆறா சினமென் றொ ன்றும் உளதோ
அணிகலன் போலே சினத்தை பூண்டால்
சிவம் என்பது
காணா போகும்
அழியா சிவத்தை
ஆறத் தழுவ
பிறவியை குலைக்கும்
சினத்தை மாய்க்கும்
ஆற்றுவது சிவம்
ஆறுவது சினம்
T. ஜெயந்தி ராகவன்
Comments