மீட்டியது சிவம் மீண்டது சிவம்( 7)
மீட்டியது சிவம்
மீண்டது சிவம்( 7)
விரும்பிய யாவும் விரும்பிப் பெற்று
எனதே என்று சொல்வன வெல்லாம்
அவனது அன்றி
உனதேதும் இல்லை
விரும்பி ஏற்க
வேறொன்றும் உண்டு
விருப்பங்கொண்டு
ஏற்றவை எதுவும்
தமதே இல்லை
என்னும் போது
நீ விரும்பி ஏற்கும் அறங்கள் மட்டும்
பிறப்புகள் தாண்டி
உடன் பயணிக்கும்
செய்யும் அறங்கள்
அவைகள் மாத்திரம்
உனக்குள் உறங்கும்
சிவத்தை அடையும்
ஆதலினாலே
அறஞ் செய்ய
விரும்பு
T . ஜெயந்தி ராகவன்
Comments