திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில்நெடும்பலம் ஊராட்சியில்தீயனைப்புத்துறை உதவியோடு சுகாதார துறை மூலம் மருந்து தெளிப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கொத்தமங்கலம் ஊராட்சி கடியே ச்சேரி. நெடும்பலம் ஊராட்சிகளில் டெல்லி இஸ்லாமியர் மாநாட்டிற்கு சென்றவர்கள் தலா ஒருவரும் சுகாதார துறை மற்றும் ஊராட்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது இவர்கள் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் பரிசோதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்த பரிந்துரை க்கப்பட்டடுள்ளன.
சுகாதார துறை மூலம் கொத்தமங்கலம். ஊராட்சி முழுவதும் ஊராட்சிதலைவர் மேனாக கோபாலகிருஷ்ணன் தலைமையிலும் ஒன்றியக்குழு உறுப்பினர் பி. மன்மதன் சுகாதார துறை உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கை மருந்து தெளிப்பன் மூலம், மருந்து தெளிக்கப்பட்டது
நெடும்பலம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஜி பழனி தலைமையில் தீயனைப்புத்துறை உதவியோடு சுகாதார துறை மூலம் மருந்து தெளிக்கப்பட்டது
வரம்பியம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முருகானந்தம் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் முன்னிலையில் ஊராட்சி முழுவதும் மருந்து தெளிக்கப்பட்டது.
மூன்று ஊராட்சிகளிலும் ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர் வட்டார ஊராட்சி அலுவலர் சுப்பிரமணியன் கிராம ஊராட்சி தமிழ்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்தனர்
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments