திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கொரோனோவைரஸ்  தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனோவைரஸ்  தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை


     திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்,கொரோனோ வைரஸ் தடுப்பு  நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனையை வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்ரியா லோகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.


      வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு டிஜிட்டல் தெர்மாமீட்டர் கொண்டு அனைவரையும் பரிசோதித்தபின்பு இரத்த அழுத்தம் சரிபார்க்கப்பட்டு  பரிசோதனைக்கு இரத்தம் சேகரிக்கப்பட்டது. 
      இந்த பரிசோதனையில், வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணீதரன்,ரவி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி