நான் ரசித்த சங்க இலக்கியம் குறுந்தொகை பாடல்
நான் ரசித்த சங்க இலக்கியம்
குறுந்தொகை பாடல் இன்று
பாடல்: 57 (பூவிடைப்படினும்]
திணை-நெய்தல்
தலைவி கூற்று
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய வுலகத்
தொருவே மாகிய புன்மைநா முயற்கே.
என்பது, காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்
சிறைக்குடி யாந்தையார்.
செய்தி
அவனும் அவளும் கூடி வாழும் காலத்தில் பூ பூக்கும் கால அளவு பிரிவு நேர்ந்தாலும் அது அவளுக்கு ஓர் ஆண்டு காலம் போல இருக்குமாம். இப்போது அவர்கள் இருவரும் தனித்தனியாக இருக்கிறார்களாம். அவர்கள் உய்ந்து வாழவேண்டுமானால் அவர்கள் இருவரும் ஒருவர் போல ஒன்றி வாழும் நிலை வேண்டுமாம்.
மகன்றில்
தண்ணீரில் வாழும் மகன்றில் என்னும் விலங்கு ஆணும் பெண்ணும் எப்போதும் இணைந்தே வாழ்வது போல அவர்கள் வாழவேண்டுமாம்.
ரசிப்பு உமாதமிழ்
Comments