நெஞ்சத்தை கிள்ளியவர்


 இயக்குனர் மகேந்திரன் அவர்கனின் நினைவு தினம் இன்று 

 

               சிறு வயது முதலே எனக்கு படிக்கும் ஆர்வம் அதிகம், காரணம் என் தந்தை அவர்களே. 




          அவர் ஒரு சாதரண தொழிலாளிதான்,இருந்தாலும் தமிழ் ஆர்வம் அதிகம், படிக்கும் ஆர்வம் அதிகம் இருக்கவே அந்த காலத்திலேயே அவர் கல்கி வார பத்திரிகை வாங்கியிருந்தார்.



         படித்த பின்பு அந்த இதழ்களில் வந்துள்ள தொடர்கதைகளை வாரா வாரம் பிரித்தெடுத்து பத்திரப்படுத்தி அந்த நாவல் முடிந்தவுடன் அவற்றை தைத்து அட்டைபோட்டு பத்திரமாக அலமாரியில் வைப்பார்.



அவராலே யே எனக்கு புத்தம் படிக்கும் பழக்கம் அதிகமாகி அவரைப்போலவே நானும் பல தொடர்கதை களை சேகரித்து புத்தகங்களாக்கி இன்னும் பத்திரமாக வைத்ததிருக்கிறேன்.தந்தை சேகரித்த வைத்த நாவல்தான் எழுத்தாளர் உமாசந்திரன் அவர்கள் எழுதிய #முள்ளும்மலரும் நாவல்

 

        இந்த நாவல் அன்றைய காலத்தில் கல்கி நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று கல்கியில் தொடராக வெளி வந்தது- 1960களில் என நினைக்கிறேன்



எந்த வருடம் என இப்போது சரியாக நினைவுக்கு வரவில்லை.



அந்த நாவலை அப்போது படித்த பிறகு அந்த நாவலுடன் மற்றும் அந்த நாவலின் கதா பாத்திரங்களோடு ஐக்கியமானேன் குறிப்பாக காளி பாத்திரம் மகா முரடன்

யாருடனும் காம்பரமைஸ் செய்து கொள்ளாதவன் .ஆனால் தங்கை பாசம் அதிகம்

காளியின் தங்கை வள்ளி பாத்திரம் . மற்றும் என்ஜீனியர் குமரன்

அந்த கிராமம் .மற்றும் மக்கள் இப்படி.

 

     இப்படிப்பட்ட பாத்திரங்களை ஒவியமாக வாரா வாரம் நாவலில் பார்த்திருப்பேன்

ஒவியம் விஜயா என நினைக்கிறேன் 



காலப்போக்கில் இந்த நாவல் நினைவுகளில் மறைந்தாலும் இந்த கதையை திரைப்படமாக்கப்போகிறார்கள் என அப்போதைய செய்தி கேட்டு

மிக மகிழ்ந்து நாவல் கண் முன்னே ஒடியது 

 

        திரு மகேந்திரன் அவர்கள் இயக்கபோகிறார் என செய்தி

அப்போது அவர் யாரென என எனக்கு மட்டுமல்ல பலருக்கும் தெரியாது-



அவருடைய திரைக்கதை வசனத்தில் இயக்கி1978ல் இந்த படம் வெளி வந்தது

மிக ஆவலுடன் சென்னையில் எங்க வீட்டிற்கு அருகாமையில் உள்ள ராக்ஸியி ல் தியேட்டரில் சென்று பார்த்தேன். 



நாவலின் பெயரிலே படம் வந்திருந்தது.

       படம் பார்க்க பார்க்க ஒவ்வொரு காட்சியும் மி க அழகாக ஆனால் ஆழமாக மூலக்கதையை சிதிலமாக்கமல் செதுக்கப்பட்டிருந்தது

படத்திற்கு ஏற்ப காட்சிகளை பின்னி ஒரு காவியமாக படைத்திருந்தார் இயக்குனர் மகேந்திரன்   நான் பார்க்க நினைத்திருந்த கிராமம் வயல்வெளி இயற்கை காட்சிகள்



                   அந்த வெள்ளந்தி கிராம மக்கள் இப்படி நேரிலே பார்த்த அனுபவம் கிடைத்தது

தமிழ் திரையயுலகத்திற்கு ஒரு புதிய இயக்குனர் கிடைத்து விட்டார்.

இனி இவ்வாறு பல திரைப்படங்கள் உருவாகலாம் என நம்பிக்கை

பிறந்தது



                   மூலக்கதைகளை சிதைக்காமல் நாம் நாவலில் கண்டு ரசித்த பாத்திரங்களை அந்த கதா பாத்திரங்களின் குணாதியசங்களை தனது திரைக்கதை வசனம் இயக்கம் மூலம் அப்படியே கண் முன் நிறுத்து வது சாதரணமல்ல ஆனால் அதனை செய்திருந்தார் மககேந்திரன் இந்த படத்தின் மூலமாக



படத்தின் ஒவ்வொரு காட்சிகள் அந்த கிராமம் வயல்வெளி இப்படி நாவலின் அனைத்து காட்சிகளும் நம் கண் முன்னே

               அப்போது பல படங்களில் வில்லனாகவே ரஜனி நடித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்த ( வில்லானக நடித்தாலும் அவரின் நடை உடை பாவனைகள் மக்களை கவர்ந்தது என்பது வேறு விசயம் ) அவரை ஒரு குணாதிசய பாத்திரத்தில் அறிமுகப்படுத்தி ரஜனியின் இமெஜை மாற்றி யது இந்தப்படம்



இந்த படத்தில் நாவலின் கண்ட காளி பாத்திரமாக வே மாறி ஒரு முரட்டு மனிதன் ஆனால் பாசமிகு அண்ணனாக ரஜனியை ஒரு வித்யாசமான பாத்திரமாக காட்டியிருந்தார் மகேந்திரன்   நாவலின் வள்ளியாக ஷோபா சொல்லவே வேண்டாம் .என்ஜியனியர் குமரனாக சரத் பாபு மிக மெஐஸ்டிக்

மங்கா வாக படாபட் ஜெயலட்சி மிக கன கச்சிதம்

படத்தின் அனைத்து , இதர பாத்திரங்களும் மிக அருமை



இந்த காலமென்றமென்றால் நேரிலோ அல்லது சமுக வலைதளங்கள் மூலமாகவோ நாம் பாராட்டமுடியும்

          அந்த காலத்தில் எந்த வசதியயும் இல்லையே ,மனத்திலே பாராட்டினேன் மகேந்திரனை.      மகேந்திரன் அவர்கள் பாடலாசிரியர் ,ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா மற்றும் இசையமைப்பாளர் இளையராசா இவர்களின் திறமைகளை உணர்ந்து அவர்களை தனது இந்தப்படத்தில்

ப யன்படுத்திக்கொண்டார் என சொல்வதே சிறந்தது என நான் கருதுகிறேன்



ஒரு புகழ் மிக்க நாவலை படமாக்குவது சாதரண விசயமல்ல

 

                     அந்த நாவலை படித்தவர்கள் அந்த கதா பாத்திரங்களோடு மிக ஜக்கியமாகியிருபபார்கள்  அவர்களை திருப்தி படுத்தி படமெடுக்கனும் , எழுதிய எழுத்தாளரும் தன் நாவல் சிதிலப்படாமல் படமாக்கப்பட்டுள்ளது என மன நிறைவு அடைவதும் அதே போல படம் எடுக்கும் தயாரிப்பாளரும் நட்டப்படாமல் இருக்கனும்



                      நடிப்பவர்களை அந்த நாவல் பாத்திரங்களாக ஐக்கிய ப்டுததி படமெடுக்க வேண்டும் அதே போல நாவலை படிக்கதாவர்களும் இந்த படத்தை ரசிக்க வேண்டும்

                     இந்த அனைத்தும் நிறைவேறிய இந்த படம் . இது இயக்குனரின் முதல் படம் னா யாரும் நம்ப மாட்டாங்க



                     சுஜாதா எழுத்தளார் குமுதத்தில் தொடராக வெளிவந்த அவரின் ப்ரியா நாவலை படமெடுக்க அனுமதித்து பின்னர் பர்யா படம் நாவல் பெயருடனே

வெளிவந்த பிறகு பார்த்துட்டு மிக வருத்தப்பட்டார் டைட்டில் தவிர வேறு ஏதும் சம்பந்தமில்லை யென

நாவலின் ஒரு அத்தியாம் கூட படத்தில் காணப்படவில்லை பர்யா கதா பாத்திரம் தவிர வேறு ஏதும் படத்தில் ஓற்றுமையில்லை

கணேஷ் பாத்திரத்தில் ரஜ னி நடித்திருந்தாலும் கதையின் கணேஷ் கதாபாத்திரத்திற்கு முரணகவே படத்தில் அவர் பாத்திரம் மாற்றப்பட்டிருந்தது,

அதைவிட கொடுமை வசந்த் கதாபாத்திரத்தில் நடித்தவர்



இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு நாவலை எப்படி படமாக்க வேண்டுமென தெரிந்த கொள்ள மகேந்திரனின் இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பது என் அபிப்பிராயம்

அப்படி ஏதும் நிகழப்போவதில்லை என்பது நாமறிவோம்



இவரின் இழப்பு மிக வருத்தமே

                    தமிழ் திரையுலகம் ஒரு திறமை மிக்க இயக்குனரை இழந்ததுள்ளது என்பது உண்மையே

முள்ளும மலரும் போல போல ஒரு படத்தை நாம் காண காத்திருக்க வேண்டும் என்பதே உண்மை

               இயக்குனர் #மகேந்திரன்* தமிழ் சினிமா உள்ளவரை அவரது புகழ் இருக்கும் – என்றார்.#ரஜனிகாந்த்



பிகு

 

நான் அதிகம் எழுதுவதில்லை

இவரின் இழப்பு ஒரு பாதிப்பை தந்ததால் எழுதினேன்

 2.4.2019

 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி