திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி மேட்டுப்பாளையம் பகுதிகளில் 2000 குடும்பத்தினருக்கு ரூ 200 மதிப்புள்ள காய்கறிகள், மாஸ்க், சோப்பு உள்ளிட்டவைகளை ஒன்றிய கவுன்சிலர் , ஊராட்சி தலைவர் சார்பில் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி மேட்டுப்பாளையம் பகுதிகளில் 2000 குடும்பத்தினருக்கு ரூ 200 மதிப்புள்ள காய்கறிகள், மாஸ்க், சோப்பு உள்ளிட்டவைகளை ஒன்றிய கவுன்சிலர் , ஊராட்சி தலைவர் சார்பில் வழங்கப்பட்டது.


இந்தியா முழுவதும் கரோனாவைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது இந்த  நிலையில் பொது மக்கள் வீட்டிற்குள் முடங்கிகிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோபால்ராமன், ஊராட்சி தலைவர் தனலெட்சுமி செல்வம் ஆகியோர்  விளக்குடி, மேட்டுப்பாளையம் பகுதியில் 2000 குடும்பத்தினருக்கு வீட்டுக்கு தேவையான  வெங்காயம், உருளை, புடலங்காய், முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட 10காய்கறிகள் மற்றும் மாஸ்க், சோப்பு உள்ளிட்டவை களை வழங்கினர்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி