எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை தொடர் ( 2 )
எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை
(தொடர்ச்சி) ( 2 )
எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்
சொன்னவர் - ஊனத்தை வென்று ஐ.ஏ.எஸ். ஆன பெண்மணி பத்மாவதி – வளர்ச்சி குறைந்த வலது கை . . . . . அதிலும் இரண்டே விரல்களுடன் பிறந்தவர் - 2005 ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர். 2006-ல் தேர்வு முடிவு வெளியானது)
நம்ம இலட்சியப் பாதை எவ்வளவு கரடுமுரடாக இருந்தாலும், அடையப்போற இலக்கை மட்டுமே குறிவச்சு, ஒவ்வொரு அடிய வச்சு முன்னேறின இலக்கை கண்டிப்பா அடைஞ்சுடலாம். நம்பிக்கைக்கு சக்தி அதிகம். நாம் எதுவாக நினைக்கிறோமோ கட்டாயம் அதுவாகவே ஆவோம். நான் ஐ.ஏ.எஸ்.ஆகணும்னு நினைச்சேன். ஆயிட்டேன். என் குடும்ப பொருளாதார நிலைமை, உடல் குறைபாடு, தோல்விகள் எதவுமே எனக்கு ஒரு பொருட்டா தெரியல. என் கண்ல நின்னதெல்லாம், ஐ.ஏ.எஸ்.
ஐ.ஏ.எஸ். ஐ.ஏ.எஸ். மட்டுமே. அப்படி தீர்மானமான குறிக்கோள் இருந்தா, தடைகள் எல்லாம் தனாவ விலகி ஓடிடும்.
(நன்றி - அவள் விகடன் மே, 26, 2006)
1954-லிருந்து வெளி வந்த தமிழ்ப்படங்களின் கருத்துகள் எப்படி நடைமுறையில் நிறைவேறின என்பவை ஒவ்வொன்றாக தொடரும்).
செ ஏ துரைபாண்டியன்
Comments