விருத்தாசலத்தில் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்டு வந்த ஜவுளி கடைக்கு தாசில்தார் கவியரசு சீல் வைப்பு
விருத்தாசலத்தில் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்டு வந்த ஜவுளி கடைக்கு தாசில்தார் கவியரசு சீல் வைப்பு
உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்காரணமாக விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகில் தடை உத்தரவை மீறி செயல்பட்டு வந்த விஜய் ஹே ஸ்டைல் ஜவுளிக்கடையை தாசில்தார் கவியரசு சீல் வைத்தார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடலூர் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகில் விஜய் ஹே ஸ்டைல் ஜவுளிக்கடை தடை உத்தரவை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் இன்று காலை அந்த ஜவுளி கடையை தாசில்தார் கவியரசு, நெய்வேலி நில எடுப்பு தாசில்தார் அந்தோணி ஆகியோர் திடீரென்று சென்று ஆய்வு செய்தனர். அப்போது, தடை உத்தரவை மீறி செயல்பட்டு வந்தது தெரிய வந்ததால், அந்த கடையை தாசில்தார் கவியரசு சீல் வைத்தார். அவருடன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் , டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் இருந்தனர்.
செய்தியாளர். கடலூர். காமராஜ்
Comments