மீட்டியது சிவம் மீண்டது சிவம் ( 10)
மீட்டியது சிவம் மீண்டது சிவம் ( 10)
ஈவது விலக்கேல் !
கொடுக்க கொடுக்க
குபேரன் ஆவாய்
இயன்றது கொடுக்க
ஈஸ்வரன் ஆவாய்
ஈவது என்பதில்
மறதியும் உண்டு
ஈன்று மறப்பது
பிறப்பின் பாக்கியம்
கொடுக்க கொடுக்க
நிறைவு கொள்வாய்
தீயவை கொடுக்க
தீமை பெருகும்
நல்லவை கொடுக்க
நல்லவை பெருகும்
கொடுத்துப் பார்த்தால்
கொற்றவன் ஆவாய்
ஈகை பெருக்கி
ஈஸ்வரன் ஆவாய்
ஆகையினாலே
ஈவது விலக்கேல்
T . ஜெயந்தி ராகவன்
Comments