Posts

Showing posts from April, 2020

பெண்ணின் பிரசவத்திற்கு காவல் துறை வாகனத்திலேயே அழைத்துச் சென்ற பெண் காவல்ஆய்வாளர்*

Image
பெண்ணின் பிரசவத்திற்கு காவல் துறை வாகனத்திலேயே அழைத்துச் சென்ற பெண் காவல்ஆய்வாளர்*    சென்னை திருவொற்றியூர் டோல்கேட் உதயசூரியன் நகரைச்சேர்ந்த கலைவாணி வயது (21) க /பெ பிரேம்குமார். கலைவாணி நிறைமாத கர்ப்பிணியான நிலையில் அவருக்கு இடுப்புவலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்கள். ஆம்புலன்ஸ் வர தாமதிக்கவே அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி காவல் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரசவத்திற்காக கொண்டு சேர்த்துள்ளார். இதனால் நெகிழ்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர் கடவுள் போல உதவியதாக பெண்காவலருக்கு நன்றிகள் தெரிவித்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஊரடங்கு நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல் :

Image
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஊரடங்கு நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல் :   திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி தாலுகா., முள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு .கந்தசாமி அவர்களின்., உத்தரவின்படி Covid 19., ஊரடங்கு நேரத்தில்.,, ஆதரவற்ற முதியோர் மற்றும்  மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் 30நபர்களுக்கு இலவசமாக மதிய உணவு தினமும் வழங்கப்பட்டு வருகின்றது.. மேலும்  இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி., ஊராட்சி மன்ற தலைவி v.சித்ரா&வெங்கடேசன்., துணை தலைவர் பன்னீர் செல்வம்., அகில இந்திய மாணவர்கள் பொது நலச் சங்கத்தின் ஆரணி தாலுகா ஒருங்கிணைப்பாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான ஏ.பெருமாள் அவர்களும் கலந்து கொண்டு முதியோர்களுக்கு உணவு வழங்கினர்....   மதுரை செய்தியாளர் : S.பெரியதுரை

Super soft Swiss Roll cake Polka Dots

Image
Today's recipe is Swiss Roll cake Ingredients Egg white - 3 Sugar - 1/3 cup Egg yolk - 3 Flour - 1/3 cup Salt -1/4 tea spoon Vanilla essence - 1 tea spoon Oil - 3 table spoon Colouring as you like Butter Icing recipe Butter - 1/4 cup Icing sugar- 1/2 cup Vanilla essence -1 te a spoon Thanks for watching...Enjoy...!!! to see live preparation by Yummy Meal      

  வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்  

Image
உப்புச் சத்தியாகிரகம்   நினைவு நாள்   இந்தியாவில்  ஆங்கிலேய   அரசு   இந்தியர்கள் மீது விதித்த உப்பு உற்பத்தி வரியை எதிர்த்து,  அண்ணல்  மகாத்மா காந்தி   குஜராத்  மாநிலத்திலுள்ள    தண்டியில்     உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம்  அல்லது  தண்டி யாத்திரை ( Salt March ) மேற்கொண்டது என்பது  அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். இப்போராட்டம், மார்ச்சு 12, 1930 இல்   தண்டியில்  தடையை மீறி  உப்பெடுக்கும் நடைப்பயணமாகத்  துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள்   இந்திய தேசிய காங்கிரசு   அறிவித்த   முழு விடுதலை   என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.   காந்தி   அடிகள் தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள்...

ஸ்வைன் புளூ’ பரவிய காலத்தில் ஊரடங்கு இல்லாமல் போனதற்கு காரணம் 

Image
ஸ்வைன் புளூ’ பரவிய காலத்தில் ஊரடங்கு இல்லாமல் போனது ஏன்? ‘ ஸ்வைன் புளூ ’  பரவிய காலத்தில் ஊரடங்கு ,  சமூக விலகல் ,  முக கவசம் என்று மருத்துவம் சாராத தற்காப்புகள் இல்லாமல் போனது தொடர்பான சில கருத்துக்கள். கொரோனா வைரஸ் தாக்குவதற்கு முன்புவரை இந்த 21-ம் நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட தொற்று நோய்கள் சார்ஸ், மெர்ஸ், எபோலா மற்றும் ‘ஸ்வைன் புளூ’ என்னும் பன்றிக்காய்ச்சல். இவற்றைப் பற்றி அறியாதவர்களுக்காக சுருக்கமாக சில தகவல்கள். சார்ஸ்:  பிறப்பிடம், சீனாவின் குவாங்டோங்க் மாகாணத்தின் சுன்டே நகரம். வவ்வால்களில் இருந்து பரவி மனிதர்களை தாக்கியது. 2002-ல் தொடங்கி 2004 வரை நீடித்தது. பரவிய நாடுகளின் எண்ணிக்கை 25. மொத்த பலி 774. சீனாவில் மட்டும் பலி 648.   மெர்ஸ் :  பிறப்பிடம், சவுதி அரேபியா. ஒட்டகம் மூலம் மனிதர்களுக்கு பரவியது. 2012 முதல் 2015 ஜூலை வரை உச்சபட்ச தாக்கம் இருந்தது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா, இங்கி...

Rishi Kapoor passes away

Image
Bollywood veteran  Rishi Kapoor passes away  at 67 in Mumbai with wife Neetu Kapoor by his side on Thursday. The news was broke by megastar Amitabh Bachchan on Twitter. He wrote, "Rishi Kapoor... gone... passed away. I am destroyed !"

ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே..

Image
ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே.   படித்ததை பகிர்ந்தேன்   ஒருமுறை படியுங்கள்.  களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான். பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன். இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன். அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?   அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான். இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி. கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே நகர்ந்தார்கள் களத்தில்.   போதும் புறப்பட்டுவிடலாம் என நினைத்த பீஷ்மம், தனது தாயின் மடியினைத் ...

இலக்கியச் சோலை    3

Image
  இலக்கியச் சோலை           பகுதி  3        ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்’    ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’  என்று தொடங்கும் வரியைக் கொண்ட பாடலை உலகுக்குத் தந்த கணியன் பூங்குன்றனார்   என்ற   சங்க  காலப் புலவரைப் பற்றி சற்றே காண்போம்.    கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும்  சோதிடம் . கணியம் தெரிந்தவன் கணியன்.    கணிமேதையார் , கணிமேவந்தவள்  என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை.   இவர்  சிவகங்கை மாவட்டம்   திருப்பத்தூர் தாலுகாவில்  உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார்.   புறநானூற்றிலும்   (புறம்: 192)   நற்றிணை   (நற்றிணை:226)  யிலும் இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை எவ்வளவு அழகாக  விளக்குகிறது   படியுங்கள்.    யாதும் ஊரே யாவரும் கேள...

நாகை மாவட்டம் துணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் அவர்கள் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

Image
நாகை மாவட்டம் துணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் அவர்கள் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மாவட்டத்தில் சுகாதார களப்பணியாளர்கள் கொண்டும் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கொண்டும் வீடுதோறும் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதனடிப்படையில் குத்தாலம் வட்டார  மருத்துவ அலுவலர் டாக்டர் அப்துல் ஃ க் அவர்கள் தலைமையில் திருவலங்காடு சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு நோயெதிர்ப்பு கிருமிநாசினி தெளித்தும் காய்ச்சல்உள்ளதா என  தர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தவபாலன், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் மாவட்ட நல்கல்வி அலுவலர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கொரோனா விழிப்புணர்வு பணியை செய்து வருகின்றனர். பீப்பிள்டுடே செய்திகளுக்காக . கடலூர். காமராஜ்

பாவேந்தர்       பாரதிதாசன்        

Image
பாவேந்தர்       பாரதிதாசன்         **       பலவிகற்ப        இன்னிசை          பஃறொடை           வெண்பா           **  புரட்சிக்    கவியாய்       புவியைப்          புரட்டி  அரட்டி(அச்சம்)   தவிர்த்த    அணிக்குத்      தலைவன்   அரக்க     குணத்தை       அறவே         ஒழிக்க    உறக்கம்      துறந்த        உணர்வுக்          கவிஞன்   பரக்க     விரிந்த       பதர்கள்         நடுவே    இரக்கம்       புரிந்த         இனிதாம்          குணத்தன்   உரக்க     நிதமும்       உரைத்தே         மகிழ ...

மதுரையில் காவல்துறையுண் இணைந்து NCC மாணவர்கள் Covid 19 ஊரடங்கு காலத்தில் உதவி  :

Image
மதுரையில் காவல்துறையுண் இணைந்து NCC மாணவர்கள் Covid 19 ஊரடங்கு காலத்தில் உதவி  : தேசிய மாணவர் படை சார்பில் காவல் துறையுடன் இணைந்து மதுரையில் பல பகுதிகளில் Covid 19 ஊரடங்கு வாகன தனிக்கையில் ஈடுபட்ட NCC அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள், 6NCC அலுவலர்கள் மற்றும் ஜூனியர் கமெண்டிங் ஆபிஸர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.. 4 TN ENGR COY NCC MADURAI 7 TN BATTALION NCC MADURAI 2 NAVAL NCC MADURAI மதுரை செய்தியாளர் : S.பெரியதுரை

ராஜா ரவி வர்மா

Image
          ராஜா ரவி வர்மா நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா- நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார். ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862-ம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார். சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார். இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்க...

Quarantine workout for arms

Image
Quarantine workout for arms Best women's arm workout Quarantine workout for Tonned Arms, Zumba Toning - Upper body isolation see here by Zin Ritu https://www.youtube.com/channel/UCFfzORs3-n79UZ-8b4A5Pag/featured  

ஆத்திசூடி           (க)  14. கண்டு ஒன்று        சொல்லேல்

Image
  ஆத்திசூடி           (க)  14. கண்டு ஒன்று        சொல்லேல்          **       ஒருவிகற்ப        இன்னிசை        வெண்பா          **  கண்டதை     மாற்றிக்      கதையெனக்         கூறினால்  அண்டமாப்    பொய்யாய்      அகிலமும்        தூற்றிடும்    அண்டுதல்     (கிட்டுதல்)       என்னும்         அறவழி          ஏற்றிட   உண்மையைப்       போற்றிப்         புகல்.      **    கண்டு ஒன்று     சொல்லேல்       வணக்கத்துடன்🙏 ச.பொன்மணி ஒலி ஒளி உணர

குருவிக்குத் தக்க ராமேஸ்வரம்

Image
குருவிக்குத் தக்க ராமேஸ்வரம் பழமொழிகளின் விளக்கம் மோதிரக் கையால் குட்டு வாங்குவது . “மோதிரக் கையால்“ அல்ல.  “மோதுகிற கையால்“,  உனக்குச் சரிசமமான அந்தஸ்து உள்ளவனிடம மோத வேண்டும் என சொல்வது.  .   சோழியன் குடுமி சும்மா ஆடுமா? சோழியன் என்ற அனத்தவர் அந்தக் காலத்தில் நிறைய முடி வளர்த்து அதை குடுமி போல் முடிந்திருப்பார்களாம்.  தலையில் வைத்து கனமான சாமான்களைத் தூக்கி வர வேண்டியிருந்தால் துணியால் செய்த சும்மாடு ஒன்றைத்  தலையில் வைத்து அதன்மேல் கனமான சாமான்களைத் தூக்கி வருவார்களாம்.  என்னதான் தலை நிறைய முடி இருந்தாலும், சோழியன் குடுமி “சும்மாடு ஆகுமா“  என்பதுதான் மறுவி “சும்மா ஆடுமா“ என்றாகி ஆகிவிட்டது.                                                     குருவிக்குத் தக்க ராமேஸ்வரம்      “குர...

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் புற்று நோயால் மரணம்  

Image
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான்   புற்று நோயால் மரணம்    உடல்நலக்   குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் ,  இன்று  ஏப்ரல் 29, 2020  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் பாலிவுட் மட்டுமல்லாது ‘லைஃப் ஆஃப் பை’, ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர படங்களிலும் மாடலிங் செய்து வந்தார்.   இவர் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நேற்றிரவு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மறைவு பாலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

Irrfan No more

Image
Actor Irrfan Khan Dies In Mumbai At 53 As news of Irrfan Khan's hospitalisation spread on Tuesday evening, the actor's spokesperson released a statement

இந்திய சினிமாவுக்கு ஓர் இழப்பு

Image
நடிகர் #இர்ஃபான்கான் மறைந்துவிட்டார் என்பது  ஓர் அதிர்ச்சி அளிக்கும் செய்தி . உண்மையில் இந்திய சினிமாவுக்கு ஓர் இழப்பு. இவ்வளவு இளம் வயதில் (52) அவர் இறந்தது ஒரு துரதிர்ஷ்டம். நடிகனுக்கு உடல் என்பது ஒரு கருவி. அதை நுட்பமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர் இர்பான் கான். மரம் அறுப்பதற்கும் மரச் சிற்பம் செய்வதற்கும் ஆன இடைவெளி ஒரு மோசமான நடிகருக்கும் நல்ல நடிகருக்கும் ஆன இடைவெளி ஆகும். பொதுவான மேலோட்டமான நடிப்பு என்பதிலிருந்து நுட்பமான நடிப்பை நோக்கி முன்னேறுவது என்பது ஒரு நடிகன் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் ஒரு பயணம். வருத்தமும் வலியும் கொடுக்கும் பொறுமையான நீண்ட பயணம். அதில் வெல்வது  தன்னையே வெல்வதாகும். அது தரும் உவகை பணம் , புகழ் இவற்றைத் தாண்டியது. இந்த உவகையைப் பெற நினைக்கும் கலைஞன் பொதுப் பாதையில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்பவன். இதனால் வரும் இழப்புகளுக்கு அஞ்சாதவன். அவர்களில் ஒருவர் இர்ஃபான். நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் பயின்றதில் இருந்து ஹாலிவுட் படங்களில் நடித்தது வரை இர்பான் கான் பயணம் செய்தது அவரது தொடர் உழைப்பினால் கிடைத்த பயன். உலகத் திரைப்படங்களில் ஒரு இந்தி...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஊரடங்கு நேரத்தில் யாதவர் சங்கம் சார்பில் நிதியுதவி

Image
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஊரடங்கு நேரத்தில் யாதவர் சங்கம் சார்பில் நிதியுதவி : விழுப்புரம் மாவட்டத்தில்., திண்டிவனம் வட்டார யாதவர் சங்கம் சார்பாக கொரோனா வைரஸ் 144 ஊரடங்கு உத்தரவு நிலை காரணமாக திண்டிவனம் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்ப்பட்டது. மேலும் யாதவர் சங்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்  வி.நவநீதகிருஷ்ணன்  BE.,BL.., அவர்கள் அரிசி (ம) மளிகைப் பொருட்களை வழங்கினார்.. மேலும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பொன்னரசு, கமலக்கண்ணன், ஜெயச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ஹரி, பாலாஜி, ஆனந்தன் ஆகியோர் முன்னின்று நிவாரண உதவிகளை வழங்கினர்.... மேலும் நிதியுதவியை பெற்று கொண்ட மக்கள் சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்...   மதுரை செய்தியாளர் : S. பெரியதுரை

ஆடுவோமே என்று நடனம் ஆட முடியாத நிலையில் உலகம்

Image
  உலக நடன தினம்   ஒவ்வோர் ஆண்டும் உலக நடன தினம்  (International Dance Day) ஏப்ரல் மாதம் 29ம் தேதி உலக அளவில் கொண்டாடப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம் (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக கொண்டாடப்படுவதில்லை. நடனம் (Dance )  நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.  பரதம் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் 'பரதம்' என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல் ப- பாவம், ர- ராகம், த- தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடன...

என்னோடு சேர்ந்து ஆடுங்க

Image
            இன்று ஏப்ரல் 29. உலக நடன தினமாகும் (International Dance Day) இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம் (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங் நடனம் (Dance ) எனும் போது நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக பரதம் தென்னிந்தியாவுக்குரிய, குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானது.  இந்த நடன தினத்தில் தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற சில பல்வேறு நடனகாட்சிகளின் துளிகள் clips  தொகுத்து வழங்கியுள்ளேன்  சில நடனங்கள்  நம்மள ஆடவைக்கும் இப்போ நாம குவாரண்டைல இருப்பதால் ஆடுவோம் ,என்ன நான்  சொல்றது  சரிதானே   பாருங்க   வணக்கம்  உமாதமிழ்

நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, விரும்புகிறீர்களோ, ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்

Image
    நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, விரும்புகிறீர்களோ, ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள் (தொடர் 3) கேள்வி : திரைப்படங்களில் நடிக்க வராமலிருந்தால் வேறு என்ன செய்திருப்பீர்கள்?   பதில் :  அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒருவேளை நான் சினிமாவிற்கு வராமலிருந்தால், இன்று தேர்தலுக்காக அல்லது உப தேர்தலுக்காக எங்கதாவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பேன். நான்கு ஆசைகளைத் தெரிவித்ததில் இது நான்காவது ஆசை.   அந்த நபர் வேறு யாருமல்ல. சென்னை கடற்கரையில் நீங்காத் துயில் கொண்டிருக்கும்     ஜெயலலிதா ஆனந்த விகடன் 10-08-1969-ல் வெளிவந்த செய்தி    செ ஏ துரைபாண்டியன்              

மொத்த பணம் வெறும், 130 ரூபாய் மட்டுமே வைத்திருந்த தலைவர்

Image
எப்படிப்பட்ட முதல்வர்?   சென்னை மாநில (தமிழக) முதல்வராக மூன்று முறையும், கிங் மேக்கராக (இந்தியாவின் பிரதமரை நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவராக) இந்தியாவில் முக்கிய தலைவராக வாழ்ந்த காமராசர், கடைசி வரை வாடகை வீட்டில்தான்  வாழ்ந்தார்.  சொந்த வீடு, கார் மற்றும் சொத்துகள் என்று எதுவும அவருக்கு இல்லை. தனக்கென்று  வங்கியில் கணக்கு வைத்திருந்தது கிடையாது. (பினாமி பெயரில் வைத்திருந்ததாகத் தவறாக நினைக்காதீர்கள்), அவர் இறக்கும்போது, அவரிடம் இருந்த மொத்த பணம் வெறும், 130 ரூபாய் மட்டுமே செ ஏ துரைபாண்டியன் .   

சிவாஜி கணேசனின் பெருமையைக் களங்கப்படுத்துகிறார்கள்”.

Image
“ சிவாஜி கணேசனின் பெருமையைக் களங்கப்படுத்துகிறார்கள்”.    “சொன்னவர் யார்?”       கேள்வி : “ ’இயற்கையான நடிப்புக்கு எதிர்காலத்தில் வரவேற்பு இருக்கும்;.  மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது’ என்று தென் இந்திய சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் தங்களுக்கு நடந்த  பாராட்டு விழாவில் நிங்கள் பேசினீர்கள் அல்லவா?     திரு. சிவாஜி கணேசனைத் தாக்கித்தான் நீங்கள் அப்படிப் பேசினீர்கள் என்று பேசிக் கொள்கிறார்களே, அது உண்மையா?”      பதில் :  “இயற்கை நடிப்புக்குத்தான் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் குறிப்பிடும்போது, உடனடியாக அவர்கள் திரு. சிவாஜி கணேசனைப் பற்றி ஏன் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள்? அப்படியானால், இவர்கள் திரு. கணேசன் இயற்கையை மீறி நடிக்கிறார் என்று கருதுகிறீர்களா? இப்படிப் பேசுவதன் மூலம் சிறந்த நடிகரான சிவாஜி கணேசனின் பெதுமையை இவர்கள் களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள்.” (மனம் திறந்து) பதில் சொன்னவர்   எம். ஜி. ஆர். 06-08-1972  ஆனந்த விகடன்-இல் வெளிவந்த தகவல்    செ ஏ து...