டாஸ்மார்க் கடையில் மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவர் கைது.
திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் வயல்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் பின்புறம் துளையிட்டு ரூ 47 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவர் கைது.
உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமா் அறிவித்துள்ள ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள், டாஸ்மாக் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை ஏப்ரல் 14 வரை திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் மெயின்ரோட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த டாஸ்மாக் கடை ( எண் 9667) செயல்பட்டு வந்தது தமிழக அரசின் உத்தரவின்படி வரும் ஏப்ரல் 14-ந்தேதி பூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி மர்ம நபர்கள் டாஸ்மாக் மதுபான கடையின் பின்புற சுவரை துளையிட்டு கடையின் உள்ளே நுழைந்து ரூ 47 ஆயிரம் மதிப்பிலான 298 மதுபாட்டில்கள் திருடிச் சென்றனர். இது குறித்து நேற்று முன்தினம் தகவலறிந்த டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் முருகானந்தம் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து டாஸ்மாக் கடை பின்புறம் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மடப்புரம் பிள்ளையார்கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த மடப்புரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25) , அய்யர் பாலு (எ) முருகேசன்(19) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மப்புரம் அருகே டாஸ்மாக் கடையில் கடந்த 28-ந்தேதி கடையின் பின்புறம் துளையிட்டு ரூ 47,000 மதிப்புள்ள 298 மதுபாட்டில்கள் திருடியது தெரியவந்தது அவர்களை கைது செய்து அவர்களிடம் மதுபாட்டில் விற்ற பணம் ரூ 11,500 மற்றும் 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இதுதொடர்பாக மேலும் செல்வம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments