திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கூழையாற்றில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

     திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கூழையாற்றில் ரூ 95 லட்சத்தில் புதிய பாலம் கட்ட அடிக்கல் - நாட்டபட்டது திருத்துறைப்பூண்டி மார்ச் 19 திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள  திருத்துறைப்பூண்டி அருகே உள்ளவரம்பியம் ஊராட்சி கூழையாற்றில் பாலம் அமைத்தால் குரும்பல் ஊராட்சி வழியாக குறுவழியாக திருத்துறைப்பூண்டிக்கு வரலாம் எனவே இந்த இடத்தில் பாலம் அமைக்க சுமார் 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். வரம்பியம் கூழையாற்றில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் புதிய பாலம் கட்ட ரூ 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் பணியை துவக்கி  வைத்தார். இதில் ஒன்றிய பொறியாளர் ரமேஷ் கிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி, ஊராட்சி மன்ற தலைவர் முருகான தம், துணை தலைவர் சாந்தி கண்ணன், மற்றும் குமரரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 20 ஆண்டுக்கு மேலாக வைத்த கோரிக்கை நிறைவேறியதற்கு பொது மக்கள் அரசு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.


 


 


பட விளக்கம்   திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கூழையாற்றில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


 


செய்தியாளர் பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி