குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு
இன்று 11 3 2020 குளித்தலை உதவி கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது மனுவில் கூறியுள்ள கோரிக்கைகள்
தந்தை பெரியார் காவேரி பாலத்தில் கடந்த மாதம் பழுதடைந்த மின் கம்பம் அப்புறப்படுத்தப்பட்டு கம்பிகளை பாலத்தில் கட்டி வைத்துள்ளனர் புதிதாக மின் கம்பம் இன்றுவரை அமைக்கப்படவில்லை.
இதனால் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது எனவே புதிய மின் கம்பம் மாற்றி பொதுமக்கள் அச்சம் இல்லாமல் பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் மேலும் பேருந்து நிலையம் அருகில் உள்ள சண்முகாநந்தா திரையரங்கம் அருகிலுள்ள சாமி உணவகம் இடையே உள்ள வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும், எனவும் இந்த வேகத்தடை ஆனது கடந்த வருடம் மாண்புமிகு முதல்வர் குளித்தலை நகருக்கு வரும்போது எடுக்கப்பட்டு இன்று வரை வேகத்தடை அமைக்கப்படவில்லை ,இதனால் நாள்தோறும் பல விபத்துக்கள் அதி வேகமாக வரும் வாகனங்களால் நடைபெறுகிறது இதனால் புதிய வேகத்தடை அமைக்க உடன் நடவடிக்கை எடுக்கவும் மேலும் பெரிய பாலம்
லட்சுமி திரையரங்கம் அருகிலுள்ள வேகத்தடையில் reflector அமைத்து தரவும்.
பெரிய பாலம் வாசவி மஹால் அருகில் மதுபான கடை எதிரில் ஒரு வேகத்தடை அமைக்கவும்.
குளித்தலை முக்கிய சாலை திருச்சி கரூர் முசிறி மணப்பாறை துறையூர் சென்னை என சந்திக்கும் முக்கிய சாலையான சுங்ககேட் பகுதியில் நான்கு திசைகளிலும் மிகப்பெரிய அளவில் வழிகாட்டும் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்..
Comments