சி ஏ ஏ ,என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற மக்கள் விரோத சட்டங்களை மத்திய மாநில அரசுகள் திரும்பபெற வலியுறுத்தி தர்ணா போராட்டம்
சென்னை பல்லாவரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கிளை தலைவர் இப்ராஹீம்தலைமையில் சி ஏ ஏ ,என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற மக்கள் விரோத சட்டங்களை மத்திய மாநில அரசுகள் திரும்பபெற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
.இந்தியா எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு,மத்திய அரசே மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்தாதே என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் காஞ்சி மேற்கு மாவட்ட துணைத்தலைவர் அக்ரம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.போராட்டத்திற்க்கு பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாவட்ட துணை தலைவர் அக்ரம் அவர்கள் தமிழக முதலமைச்சர் இந்த போராட்டத்திற்க்கு பின்பு இந்த மக்கள் விரோத சட்டங்களை திரும்பபெறவில்லையென்றால் வருகின்ற மார்ச் மாதம் 18ம் தேதி தமிழகத்தில் உள்ள எட்டு சிறைச்சாலைகளில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மு. அமிர்தலிங்கம்
Comments