நேர்மறை எண்ணங்களை நன்றியுணர்வுடன் பகிர்வோம்

"நேர்மறை எண்ணங்களை நன்றியுணர்வுடன் பகிர்வோம்"


பகுதி   1


 


மசாரு எமோட்டோ ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.அவரது ஆராய்ச்சி இன்றளவில் பேசப்படுவதற்கு காரணம் அவரது நேர்மையான சிந்தனை மட்டுமே.அவரது ஆய்வு "The secret Life of water" என்ற புத்தகத்தின் வாயிலாக வெளிவந்துள்ளது.


அவர் எடுத்துக் கொண்ட பொருள் மூன்று கண்ணாடி ஜாடி,தண்ணீர் மற்றும் வேக வைத்த அரிசி.மூன்று கண்ணாடி ஜாடியிலும் சமமான அளவு நீரும் அரிசியும் போடப்பட்டது.


பின்னர் முதல் கண்ணாடி ஜாடியின் முன் சென்று அவர் சில நேர்மறையான வார்த்தைகளை சில நிமிடங்கள் பேசினார் . 
இரண்டாவது கண்ணாடி ஜாடியின் முன் நின்று சில எதிர்மறையான வார்த்தைகளை சில நிமிடங்கள் பேசினார்.
அடுத்ததாக மூன்றாவது கண்ணாடி ஜாடியிடம் எதுவும் பேசாது கடந்து சென்றார்.
இதே போல் சில வாரங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் எமோட்டோ.அவரால் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடிந்தது. 


முதல் ஜாடியில் இருந்த அரிசி வெண்ணிறமான நிறத்துடனும் பெரியதாகவும் நல்ல வாசனையுடனும் இருந்தது.
இரண்டாவது ஜாடியில் இருந்த அரிசி கருப்பு நிறத்தில் இருந்தது.
மூன்றாவது ஜாடியில் இருந்த அரிசி கருப்பு நிறத்துடன் துர்நாற்றத்துடனும் இருந்தது.


இந்த ஆராய்ச்சியின் நோக்கமாக எமோட்டோ கூற வருவது தண்ணீர் மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ள அனைத்துக்கும் உணரும் திறன் உள்ளது.நாம் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் யாரோ ஒருவரின் துயரம் போக்கும் அளவில் நேர்மறையான வார்த்தைகளாக இருக்க வேண்டும் என்கிறார் எமோட்டோ.அதாவது யாரையும் உதாசீனப்படுத்தாது அன்பான வார்த்தைகளை பேச வேண்டும் என்கிறார்.மேலும் முடிந்தளவு நம்மை தேடும் நபர்களிடம் அவர்களுக்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தை தர வேண்டும் என்கிறார் எமோட்டோ.நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்களிடம் சரி முகம் தெரியாதவர்களிடம் சரி அன்பான வார்த்தைகளை பேசுங்கள்.நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த சக்தி மட்டும் நம்பிக்கை வாய்ந்தது என்கிறார் எம்மோட்டோ.


அடுத்தக்கட்டமாக எமோட்டோ அவர்கள் அந்த மூன்று கண்ணாடி ஜாடிகளையும் ஒன்றாக வைத்து ஒரு குழந்தையை அழைத்து அவற்றிற்கு நன்றியைச் சொல்லச் சொல்லுகிறார்.சில வாரங்கள் கடந்து பார்த்தால் ஒரு நல்ல மாற்றத்தை எமோட்டோ அவர்களால் காண முடிந்தது.


இரண்டாம் மற்றும் மூன்றாம் கண்ணாடி ஜாடியிலுள்ள கருப்பு நிற அரிசி நல்ல வெண்ணிற நிறத்துடன் காட்சி தந்தது.எமோட்டோ கூறுகையில் நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் நம்முடைய அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்கிறார்.அதாவது பிரச்சினை வரும் சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் நன்றியுணர்வை வெளிப்படுத்தி நன்றி நன்றி என்று நாம் உச்சரிக்கும் போது நம் கவலைகள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்கிறார்.


அன்பைப் பகிருங்கள் 


- கீர்த்தனா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி