மொபைல் அப்ளிகேஷன் வழியாக திணைநில வாசிகள் இளைஞர்களின் நாடகம்
Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள்
இளைஞர்களால் நிரம்பிய குழு நேற்று (March 27) உலக நாடக தினத்தை Zoom என்கிற App வழியாகக் கொண்டாடினார்கள்
கொரோனா அச்சத்தால் நடிகர்களும், பார்வையாளர்களும் வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு சூழல்களில் தனித்து இருந்தார்கள் . ஆனாலும் Zoom App வழியாக இணைந்து நேற்று சுமார் ஒரு மணி நேரம் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்கள்
. சுமார் 100 பேர் வரை இவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை இரசித்தார்கள்.
மிக முக்கியமாக திருமிகு.நாசரும், திருமிகு. அம்பையும் இவர்களுடன் இணைந்திருந்து, இந்த இளைஞர்களின் முயற்சியை பாராட்டி ஊக்கமளித்தார்கள்.
”உலகிலேயே முதல் முறை என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். கொரோனா நம்மை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்தாலும், ஒரு நிஜக் கலைஞன் தன்னை எப்படியாவது வெளிப்படுத்திக் கொள்வான், தனக்கான பார்வையாளனை எப்படியாவது தேடி இணைத்துக் கொள்வான் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியிருக்கிறது”, என்று நாசர் பாராட்டு தெரிவித்தார்.
”நாடகம் என்பதே ஒரு உயிர்க்கலை, பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடும் கலை. அதை மொபைல் ஃபோன் App வழியாக நடத்துவதும், பார்ப்பதும் வித்தியாசமான முதல் முறை அனுபவம். ஆனாலும் Wi-fi சங்கடங்களை மீறி என்னால் ஓரிரு இடங்களில் நாடகத்தை முழுமையாக உணர முடிந்தது. பார்வையாளர்களை விட நடிகர்களுக்கு இது மிக மிக வித்தியாசமான சோதனை முயற்சி. அதனால் அவர்களுடைய அனுபவத்தைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன்”, என்று அம்பை பேசினார்.
கொரோனா அச்சத்தால் வெளிய நடத்த இயலாத முடியாத நிலையில் தொடர்ந்து குழு நண்பர்களின் ஆலோசனையில் தில் Zoom App வழியாக இணைவோம் என்று முடிவாகியதாம் . இரண்டே நாட்கள்தான், குழுவில் இருந்த அனைவரும் அதில் Overlap, time delay, distorted audio சிக்கல்களை மீறி நடிப்பதற்கான உத்திகளை கண்டுபிடித்துவிட்டார்கள்
. நேற்று காலை ரிகர்சல், வெவ்வேறு அறைகளில், வெவ்வேறு ஊர்களில் இருந்து அனைவரும் பயிற்சி செய்தார்கள். அந்த பயிற்சிசெய்துள்ளனர்
. மாலை 5 மணி அளவில் துவங்கி, குழப்பங்கள் இல்லாமல் தெளிவாக உலக நாடகதினத்தை Zoom App-ல் மனநிறைவுடன் கொண்டாடி சாதனை படைத்துள்ளார்கள்
இந்த திணைநிலவாசிகள்
இந்த கான்செப்ட் புரிந்து இயக்கிய பகு, இசை இயக்குநர்கள் சாரு மற்றும் லியோன் ஆகியோர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்
இந்த திணைநிலவாசிகள் - தொடர்ந்து Zoom App வழியாக நடிப்பு மற்றும் இசை தொடர்பான பயிற்சி வகுப்புகள் (Workshop) நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்
இதனை தயாரித்தவர் .. டைரக்டர்.திரு செல்வகுமார் ( பிரபல நகைச்சுவை நடிகர் ஐ எஸ் ஆர் அவர்களின் புதல்வர்)
உலகிலேயே முதல் முறையாக, மொபைல் ஃபோனில், ஒரு App வழியாக நாடகம் நடத்திய குழு என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
அவருக்கும் இந்த திணைநிலைவாசிகள் குழுவிற்கும் நமது பாராட்டுதல்கள்
Comments