மகளிர் தினத்தையொட்டிவிமானங்களை இயக்கிய பெண்கள்

 


மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கும், உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கும் ஏர்இந்தியா விமானங்களை பெண்களே இயக்கினார்கள்.



சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு டெல்லிக்கு சென்ற விமானத்தில் 123 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானத்தை பெண் விமானிகள் ஆர்த்தி டி குர்னி, பி.கே.பிரித்திகா, விமான பணிப்பெண்கள் மீனாட்சி குந்தல், அரோரா ரீனா, பீர் கீதா, ரஸ்மி சுரானா, பிரியங்கா ஹிரிகன் ஆகியோர் இயக்கினார்கள்.


 


சென்னையில் இருந்து பகல் 2.20 மணிக்கு கோவைக்கு சென்ற விமானத்தில் 143 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானத்தை விமானிகள் சோனியா ராணி ஜெயின், விரிண்டா நாயர், விமான பணிப்பெண்கள் கரீஷ்மா, சரிதா, ஜீனா, மாயா, சீட்நா ஜெ ஆகியோர் இயக்கினார்கள்.


 


 


அதேபோல் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு துபாய்க்கு சென்ற விமானத்தை விமானிகள் சோனியா ராணி ஜெயின், விரிண்டா நாயர், விமான பணிப்பெண்கள் விபோலி, சினேகா பகதி, சுவாதி முச்சாடியா, பிபர் பிரசன்னா, நாகமணி ஆகியோர் இயக்கினார்கள்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி