ஒரு குட்டிக்கதை அனைவரும் வீட்டில் இருக்க
ஒரு குட்டிக்கதை
இம்சை அரசன் 24ம் புலகேசி :அமைச்சரே மக்களிடம்
தொற்று நோய் பரவமால் இருக்க அனைவரும் வீட்டில் இருக்க
தண்டோரா போட்டு உத்தரவு போட்டேமே இப்ப என்ன நிலைமை?
அமைச்சர்: எங்கே இருக்கிறார்கள், அனைவரும் குடித்து கொண்டு கும்மாளமிட்டு வீதியில் உலா வருகிறார்கள் தினமும் சொல்வதை கேட்பதில்லைலையாரும் நம் உத்தரவை மதிக்கல மன்னா /
, இம்சை அரசன் 24ம் புலகேசி : வேறு என்ன செய்யலாம் அமைச்சரே
அமைச்சர் :எனக்கு ஏதும் தெரியல மன்னா
இம்சை அரசன் 24ம் புலகேசி : நான் சொல்றபடி தண்டோரா போட சொல்லுங்க
அமைச்சர் :எப்படி மன்னா அது சரி வருமா
இம்சை அரசன் 24ம் புலகேசி : சரி வரும்
நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி ,நமது நாட்டுக்கு அருகில் உள்ள கானகத்தில் உள்ள கொடிய விலங்குகளான சிங்கம் .புலி ,கரடி முதலானவை காட்டில் உணவின்றி நமது நாட்டில் நுழைந்துள்ளதால் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி வீட்டில இருக்க வேண்டும் இது மன்னர் உத்தரவு என மறு நாள் தண்டோரா போடப்பட்டது
விளைவு என்னவென உங்களுக்கு தெரிந்திருக்கும்
கற்பனை
உமாதமிழ்
Comments