சுய ஊரடங்கில் கடலூர் .சிதம்பரம் விருத்தாசலம்

இன்று 22,.3.2020 ,சுய ஊரடங்கு கடைப்பிடிப்பதால் கடலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் கார், பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர்.
 
இந்தியா முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்திலும் அனைத்து கடைகள், வணிகவளாகங்கள் மூடப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை, கார், பஸ், வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 60 ஆயிரம் கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 549 அரசு பஸ்கள், 500க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள், 2,427 ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், 1000க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் என அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் அந்த அந்த போக்குவரத்துக் கழக டெப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் சுய ஊரடங்கிற்கு முழு ஆதரவு தெரிவித்து வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.


கடலூர்-.


கடலூர் நகரில் முக்கிய சாலைகள் அனைத்திலும் வாகன போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் செம்மண்டலம்,சாவடி, திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், மஞ்சகுப்பம் உட்பட அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி  காணப்படுகிறது. நேற்று முதல் மீனவர்கள் யாரும் மீன் படிக்க செல்லவில்லை.
கடலூர் லாரஸ் ரோடு
 


சிதம்பரம் :-


சிதம்பரம் நகரில் பஸ் நிலையம், மேலவீதி, கீழவீதி, தெற்கு வீதி, எஸ்.பி. கோயில் தெரு என முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலுக்கு வரப் பக்தர்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் கோயில் வளாகமும் வெறிச்சோடி காணப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் எப்பொழுதும் பரபரப்பாகக் காணப்படும் பல்கலைக் கழக வளாகம் மாணவ,
மாணவிகளின் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
சிதம்பரம் பஸ் நிலையம்

 


விருத்தாசலம் :-


விருத்தாசலம் நகரைச் சுற்றி அதிகப்படியான கிராமங்கள் உள்ளதால் நகரில் எப்பொழுது மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் கடை வீதியில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நகரில் பாலக்கரை, பஸ் நிலையம், கடலூர் ரோடு என அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மாவட்டத்தில் பண்ருட்டி, வடலூர், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி போன்ற நகரகளிலும்மக்கள் நடமாட்டமும், வாகன போகட்குவரத்தும் இன்றி வெறிச்சோடிதான் காணப்படுகிறது.    


 


     விருத்தாசலம் செய்தியாளர் ஆர்.காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி