கூட்டுறவுகள் மூலம் மக்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கு பொதுவிநியோகபொருட்கள் வழங்க ஆலோசனை
கொரானா வைரஸ்வின் சமுதாய விலகல் காலத்தில் பொது விநியோகம் முறையில் வழங்ப்படும் பொருட்களை மக்களுக்கு வழங்க கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றினால் நிச்சயமாக இதிலிருந்து மீளலாம் என . ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் அவர்கள் நமக்கு அரசுக்கு தெரிவிக்கும் பொருட்டு இதனை செயல்படுத்த கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.என தெரிவித்துள்ளனர்
தற்போதுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் (சுமார் 80% மக்கள்)ஆதார் கார்டுடன் இணைக்கபட்ட காஸ் பதிவு உள்ளது அதில் அவர்களுடைய வங்கிக்கணக்கு விவரங்கள் உள்ளன . சுமார்i 2 கோடிகார்டுதாரர்க ளில் அரிசி கார்டு,கெரசின்கார்டு சர்க்கரை கார்டு மற்றும் இதர பிரிவினருக்கான வெள்ளை கார்டு உள்ளன.சுமார் 95%பேர் ஆதார் கார்டு வைத்துள்னர். சென்னையில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு அரிசி கோதுமை சர்க்கரை பருப்பு பாமாயில் கெரசின் ஆகிய பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. டியூசிஎஸ் மற்றும் சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டககசாலைக ளிலும் அனைத்து மளிகை மற்றும் காய்கறி பிரிவுகளும் உள்ளன .இந்நிலையில் கொரானா வைரஸ் ஐ தடுக்கும்பொருட்டு ஊரடங்கு சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது
.தற்போது தமிழ்நாட்டில் நிலவரம் 2ம் நிலையில் உள்ளது. பல முன்னேறிய நாடுகளான அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் இத்தாலி சைனா ஜெர்மனி போன்ற நாடுகளே இந் நோய் கண்டு அவதியுறும் நிலையில் 130கோடிமக்கள் தொகை கொண்டஇந்தியாவில் 3-ம் நிலை அடைந்தால் நிலைமை மோசமாகும் . இந்நிலையில் முழு ஊரடங்கு சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்படவேண்டும்.இதற்கு ஒரே வழி அனைத்து கடைகளும் 21நாட்களுக்கு மூடப்படவேண்டும்(except medical shops,gas supply,hospitals) அரசே கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக கொள் முதல் செய்தும் ரேஷன் கார்டுகள் மூலம் அனைத்து ஏழை மக்களுக்கும் முதலில் 1 வாரத்திற்கான அரிசி கோதுமை எண்ணை பருப்பு மற்றும் பால் பவுடர் காய்கறி ஆகியவற்றை இலவசமாக வார்டு கவுன்சிலர் மூலம்வேன்மூலமாக வீட்டுக்கு வீடு வழங்க ஏற்பாடு செய்யலாம்.இதை கண்காணிக்க எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகளை நியமிக்கலாம்.இதுபோன்று அரசு இதர பிரிவினருக்கும் அவர்களுக்கு அவர்களது Debit/credit card மூலமாக வழங்கலாம். ரொக்கத்தொகை அளிக்க வேண்டிய அவசியமில்லை. இதே போன்று தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு கடைகள் மூலமாக வேன் மூலம் அவர்கள் வீட்டிலேயே டெலிவரி செய்யலாம். அனைவரையும் வீட்டிலிருக்கும்படி செய்யலாம்இதற்கு தேவையான தற்காலிக பணியாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். சென்னையில் தங்கியுள்ளஇதரமாநில பணியாளர்களுக்கு அரசு தற்போது அளித்துவரும் உணவு(அம்மா உணவகம் மூலமாக) இருப்பிடம் போன்றவற்றை தொடர்ந்து அளிக்கலாம். இம்முறை பயன்படுத்தப்பட்டால் 90 சதவீதத்திற்கு மேல் ஊரடங்கை அமுல் படுத்தலாம்
பொதுவிநியோகத்திற்கு அரசு மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்க பரிசிலிக்கலாம்
Comments