துருப் பிடிக்காத தூண்

தகவல் களஞ்சியம்


துருப் பிடிக்காத தூண்


 


    இரும்பால் செய்யப்பட்ட எதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் துருப்பிடிக்கத் தொடங்கி விடும்.  ஆனால், இந்தியாவின் தலைநகராம், டெல்லி குதுப்மினார் அருகே உள்ள ஓர் இரும்புத் தூண் சுமார் 1இ600 அண்டுகளாக காற்றையும் மழையையும் வெயிலையும் எதிர்கொண்டபோதும் சிறிதும் துருப் பிடிக்காமல் இன்று வரை இருக்கிறது.     99.72 சதவீதம் அளவுக்கு இரும்பைக் கொண்ட  த்தூண் ஓர் அதிசமாகவே விளங்கி வருகிறது.         இன்றைய நவீன இரும்பாலைகளால் கூட இப்படி ஒரு தூணை உருவாக்குவது கடினம்.


பழங்கால உலோகவியல் நிபுணர்கள் துருப் பிடிக்காத இரும்பை உருவாக்கும் அரிய நுட்பத்தை அறிந்திருந்தனர்.  ஆனால் அந்த நுட்பம் அவர்களுடனே மறைந்து போனதுதான்  சோகம்.  சுமார் 8 டன எடையுள்ளதாகக் கருதப்படும் 7.3 மீட்டர் (24 அடி) உயரம் கொண்ட    இத்தூண் இணைப்புகள் ஏதுமின்றி ஒரே வார்ப்பாக உள்ளது. 


தகவல்:செ. ஏ .துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி