திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையை உடைத்து 40 ஆயிரம் மது பாட்டில்கள் திருட்டு
உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பதற்காக பிரதமா் அறிவித்துள்ள ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கபடுகிறது. தமிழ்நாட்டிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளிலியே தங்கி இருக்கின்றனர். அத்தியாவசியத் தேவைகளான பால் பொருட்கள் பொருட்கள் , செய்தித்தாள்கள், காய்கறி கடைகள் உள்ளிட்டவைகள் மட்டும் இயங்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகள், டாஸ்மாக் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை ஏப்ரல் 14 வரை திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை எண் 9667 செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு கடையின் உள்ளே இருந்த 40 ஆயிரம் மதிப்பிலான 288 மதுபாட்டில்கள் திருடிச் சென்றனர். சுவரைத் துளையிட்டு மதுபான பாட்டில்களை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 144 தடை உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை உடைத்து 40 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments