வாடிகனில் போப்புக்கு கொரோனா டெஸ்ட்

*வாடிகனில் போப்புக்கு கொரோனா டெஸ்ட்*


வாடிகன்: வாடிகனில் போப்புக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரானா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலரையும் அச்சத்திற்குள் ஆழ்த்தி உள்ளது. உலகில் ஒரு லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் 2 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 33 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


இத்தாலியில் 3,900 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 197 பேர் பலியானதாக கூறப்படுகிறது. வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ்சுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது.


வாடிகன் செய்திதொடர்பாளர்


இது குறித்து வாடிகன் செய்திதொடர்பாளர் மேட்டியோ புருனி கூறியதாவது: சமீபத்தில் போப்புக்கு லேசான இருமல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்ற சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் போப்புக்கு கொரோனா இல்லை என தெரிய வந்தது. தொடர்ந்து போப்புக்கு முன்னெச்சரிக்கை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன . வாடிகனில் போப் வசிக்கும் இடம் அருகே உள்ள நூலகத்திற்குள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வாடிகன் நகரில் ஒரே ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி