144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் இருசக்கர வாகனத்தில் 68 குவாட்டர் மதுபாட்டில் பதுக்கி வந்த வாலிபர் கைது.
திருத்துறைப்பூண்டியில் கரோனா வைரஸ் 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் இருசக்கர வாகனத்தில் 68 குவாட்டர் மதுபாட்டில் பதுக்கி வந்த வாலிபர் கைது.
திருத்துறைப்பூண்டி பகுதி கரோனாவைரஸ் பரவாமல் தடுக்க 144-தடை உத்தரவையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அபிஷேக கட்டளை தெருவை சேர்ந்த ரமேஷ் (28) தனது ஸ்கூட்டியில் திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் சென்றபோது சந்தேகத்தின்பேரில் அவரது வாகனத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சோதனையிட்டனர் அதில் 68 மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனைக்காக கொண்டுவந்தது தெரியவந்தது போலீசார் அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைப்பற்றிய மதுபாட்டில் அங்கேயே அழிக்கப்பட்டது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments