காதல் எப்போதுமே பழசுதான்
கவிதை பக்கங்கள்
காதல் எப்போதுமே பழசுதான்
என்னை விட்டுப் போனதாக நான் நினைக்கவில்லை
என்னை விட்டு நீ எப்படிச் செல்ல முடியும்
நீ நானாகியதும் நான் நீயாகியதும் எப்படி பழைய நிலைக்கு வரும்
எனக்குள் வாழுகின்ற உன்னை என்னால் வெளியேற்ற முடியவில்லை வெளியேறுதலும் சாத்தியமில்லை
எனது மண் பானை உடைவதற்கு முன்னே
நான் பித்தளைப் பானை பாவித்திருக்கலாம்
என்னை உடைத்திருக்காது
நானும் உடைந்திருக்க மாட்டேன்
பிரிவு உடல்களுக்கானதென்று எனது காதல் எனக்கு வகுப்பு எடுத்திருக்கிறது
பிரிவு மனங்களுக்கு உரியதல்ல என்ற தத்துவமும் நான் அறிந்ததுதான்
முடியுமானால் மீண்டும் ஒரு முறை பிறந்து இருவரும் சந்திப்போம்
எனது காதல் அப்போதும் பழைய சட்டைதான் போட்டிருக்கும்
-ராஜகவி ராகில்
Comments