குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது போராட்டத்தின்போது உடனடியாக தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.


 இதேபோல் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு பகுதியிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.    


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி