கண்ணிலே டாட்டு இப்ப கண்ணே அவுட்டு
கண்ணில் டாட்டு (பச்சை குத்துதல்) போட்டால் பார்வை பறிபோகுமா?
போலந்து நாட்டின் ரோக்லாவ் நகரத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற மாடல் அழகி போலந்தைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரும் குத்துச் சண்டை வீரருமான போபெக்-கின் தீவிர ரசிகை. போபேக் தனது 2 கண்களிலும் கருமை நிற டாட்டு போட்டிருப்பார்.
அவரைப் போலவே கண்ணில் டாட்டு போட விரும்பிய மாடல் அழகி, டாட்டு போடும் அனுபவம் இல்லாத, பணத்துக்காக பொய் கூறிய ஒரு நபரிடம் தெரியாத் தனமாக டாட்டு போட்டுக் கொண்டார். போட்டு முடித்தவுடன், 2 கண்களும் எரிச்சலாக இருப்பதாகவும் வலிப்பதாகவும் கூறினார். அந்த நபர் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என கூறி, வலி நிவாரணி ஒன்றை கொடுத்து, பணத்தை பெற்றுக் கொண்டு அழகியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
ஒருசில நாட்களில் அவர் இடது கண் பார்வையை இழந்து மருத்துவரை அணுகியபோது கண்ணில் கருமைநிற டாட்டு பரவியதில் கண் பார்வையைத் திரும்பப் பெற முடியாது என்று கூறியதோ? மேலும் விரைவில் வலது பக்க கண்ணிலும் பார்வையை இழக்க நேரிடும் என எச்சரித்தனர்.
இனிமேல் டாட்டு போடுவதற்கு முன் எங்கெங்கு போட வேண்டுமென்று நன்கு ஆலோசித்து முடிவெடுங்கள். மற்றவர்கள் போட்டுக் கொள்கிறார்கள், தான் மதிக்கக் கூடியவர் போட்டுக் கொள்கிறார் என்பதற்காக, அதே போல் போட்டுக் கொள்ள வேண்டும் என நினைக்காதீர்கள். அப்படியே முடிவெடுத்தால், நன்கு விசாரித்து, நல்ல பயிற்சி பெற்றவர் களிடம் டாட்டு போட்டுக் கொள்ளுங்கள். அழகை விட, நல்ல உடல் நலம் முக்கியமானது. நன்றாக அதனதன் பணியை செய்யும் உடல் உறுப்புகளை இழக்கக் கூடாது என்பதை நினைவில் கொண்டு முடிவெடுங்கள், செயல்படுங்கள்.
தகவல் : செ ஏ.துரைபாண்டியன்
Comments