திருத்துறைப்பூண்டியில் அனைத்து கட்சியினர் எம்எல்ஏ தலைமையில் போராட்டம்

திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கிளையிலிருந்து இயங்கும் பேருந்துகளை வேதாரண்யம் அரசு போக்குவரத்து கிளைக்கு தொடர்ந்து மாற்றம் செய்வதை கண்டித்து அனைத்து கட்சியினர் போக்குவரத்து கிளை முன்பு எம்எல்ஏ தலைமையில் மறியல் செய்து போராட்டம் நடந்தால் பரபரப்பு.
திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கிளையிலிருந்து சென்னை , பழனி , திருப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு தொலைதூர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஏற்கெனவே இயக்கப்பட்ட சென்னை பேருந்துகளில் ஒன்று நிறுத்தப்பட்டுவிட்டதுமதுரை , ராமேஸ்வரம் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை நாகப்பட்டினம் போக்குவரத்து கிளைக்கும்  இங்கிருந்து இயக்க விரும்பாத நிர்வாகத்தினர்   பேருந்து உரிமையை தாரைவார்த்து கொடுத்தனர். இந்த நிலையில் தற்போது திருத்துறைப்பூண்டிக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்ட பழனி செல்லும்பேருந்தை வேதாரண்யம் கிளைக்கு மாற்றம் செய்தனர் இதனை கண்டித்து எம்எல்ஏ ஆடலரசன் தலைமையில் அனைத்து கட்சியினர் அரசு போக்குவரத்து கிளை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து தகவலறிந்த போலீஸ்  டிஎஸ்பி பழனிச்சாமி , கிளை மேலாளர் ஜெய்சங்கர் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து ஒரு மணிநேரமாக நடைபெற்ற மறியல் போராடம் கைவிடப்பட்டது.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி