ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
டில்லியில் ஜனநாயக ரீதியாக குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராடிய மக்கள் மீது வன் முறையை ஏவி தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும் வேடிக்கை பார்த்த டெல்லி காவல்துறையையும் கண்டித்து செங்கல் பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
.இதில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்கள் ஆர்பாட்டத்தினை ஒருங்கிணைத்தார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுசெயலாளர் வன்னியரசு அவர்கள் கண்டன உரையாற்றினர்.இதில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments