அரசுக்கு சொந்தமான இடங்களில் வசித்து வருபவர்களுக்கு இடம் வழங்க வேண்டி ஆர்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் லஞ்ச ஊழல் எதிர்ப்பு உரிமைகாப்பு இயக்கம், இயக்கம், உரிமை காப்பு இயக்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆசிய வங்கி அரசு திட்டத்தில் ஆற்றங்கரைகளில் வசித்து வந்த மக்களுக்கு இடம் வழங்கியதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழிமுறயில் நிவாரணம் வழங்ககோரி தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.



 



பாமணி சங்கர் தலைமை வகித்தார், ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, லஞ்ச ஊழல் உரிமை காப்பு இயக்கம் வரதராஜன் முன்னிலை வகித்தனர். மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் காளிமுத்து, பொருளாளர் அன்பு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.ஆர்பாட்டத்தில்
தமிழக அரசு ஆற்றங்கரைகளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் வசித்து வருபவர்களுக்கு இடம் வழங்ககுவதாக அளித்த வாக்குறுதி அடிப்படையில் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தாமதப்படுத்தும் பொதுப்பணித்துறை பொறுப்பு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும், தாசில்தார் ஆய்வு செய்து  தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர். 


 


செய்தியாளர் பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி