உலகிலேயே பிரமாண்ட மோதிரா கிரிக்கெட் மைதானம்
அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் பிரமாண்ட புகைப்படத்தை வெளியிட்டது பிசிசிஐ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள உலகிலேயே பிரமாண்ட மோதிரா கிரிக்கெட் மைதானத்தை வானில் இருந்து எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அந்த மைதானத்தில், நமஸ்தே டிரம்ப் எனும் பெயரில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் பிரதமர் மோடியும், டிரம்பும் கலந்து கொள்ளவுள்ளனர். தற்போது அந்த மைதானத்தை வானில் இருந்து எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த அழகிய படத்தை கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பி பார்த்த வண்ணம் உள்ளனர்
Comments