கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்குதிறன் வளர்ப்பு பயற்சி முகாம்
திருத்துறைப்பூண்டியில் சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் , பாரதமாதா குடும்பநல நிறுவனம், ஜேசீஸ் சங்கம் சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்குதிறன் வளர்ப்பு பயற்சி முகாம் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. ஜேசீஸ் தலைவர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார், டாக்டர் ராஜா முன்னிலை வகித்தனர். ஆலத்தம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கெளரி , குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி, மாவட்டகுழந்தைகள் நலக்குழு தலைவர் ஜீவானந்தம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் நாகலெட்கமி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சங்கீதா, வக்கீல் கந்தசாமி, சட்ட பணிகள் குழு தன்னார்வலர் கருணாநிதிஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களை எப்படி வளர்ப்பது என்பது குறித்து பயிற்சி ஆலோசனை வழங்கப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசுவரவேற்றார், ஜேசீஸ் செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் , குழந்தைகள் பாதுகாப்பு அலகு பாரதமாதா குடும்பநல நிறுவனம், ஜேசீஸ் சங்கம் , இண்டியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் செய்திருந்தனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments