கொரேரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம்
திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி பாரதிதாசன் மாதிரி கல்லூரியில் சமூகப்பணித்துறை சார்பில் கொரேரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பேராசிரியர் கோகிலா தலைமை வகித்தார், சுகாதார மேற்பார்வையாளர்கள் கெளரி, பாஸ்கரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து பேசினர்.
கிராம சுகாதார செவிலியர் தமயந்தி, மேற்பார்வையாளர் பார்த்திபன், உதவி பேராசிரியர் பிரீத்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைகீதா, ரம்யா தொகுத்து வழங்கினர்,
திவ்யபிரியா வரவேற்றார், ராஜகுமாரி நன்றி கூறினார்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments