நான் ரெடி எது கேட்டாலும் பதில் கூகுள் மீனா
சிரி, அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட் போன்ற செயற்கை நுண்ணறிவு வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவைகளுக்குப் போட்டியாக புதிதாக கூகுள் மீனா அறிமுகம் ஆக உள்ளது.
ஆனால், இதர வாய்ஸ் சேவைகளைப் போல் மிகவும் இயந்திரத்தனமாக இல்லாமல் சக மனிதர்களிடம் பேசும் அனுபவத்தை வழங்கவே கூகுள் மீனா அறிமுகம் ஆவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக, அலெக்ஸா, சிரி போன்ற சேவைகளில் நீங்கள் தகவல் கேட்டால் உங்களுக்கு பதிலளிக்கும். ஆனால், கருத்து கேட்டால் பதில் வராது.
உதாரணமாக, இன்றைய கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி எத்தனை ரன்கள் எடுத்தார் எனக் கேட்டால் அந்தத் தகவலை அலெக்ஸா தரும். ஆனால், விராட் எவ்வளவு சிறப்பாக விளையாடினார்? எனக் கருத்து கேட்டால் அதற்கு இயந்திரத் தனமாக ‘உங்கள் பார்வையைப் பொறுத்தது’ எனப் பதிலளிக்கும்.
இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டே வெளியாக உள்ளது கூகுள் மீனா. இயந்திரத் தனமாக இல்லாமல் உங்களுடன் சரிக்குசரியாக பேசும் செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் மீனா இருக்கும். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசும் உணர்வை கூகுள் மீனா அளிக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments