கமலஹாசனும், ரஜினிகாந்த்ம் மத்திய அரசுக்கு முதுகுபிடித்துவிடும் வேலையை செய்கிறாரர்கள்

கமலஹாசனும், ரஜினிகாந்த்ம் மத்திய அரசுக்கு முதுகுபிடித்துவிடும் வேலையை செய்து வருவதாக
சி ஏ ஏ -க்கு எதிராக திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற 14வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் இயக்குனர் கெளதமன் பேட்டி.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துபேட்டையில் மத்திய கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும். டெல்லியில் போராடிய இஸ்லாமியர்கள் சுட்டு கொல்லபட்டதை கண்டித்தும்
14வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த இயக்குனர் கெளதமன் தனது ஆதரவை தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது,


குடியுரிமை சட்ட திருத்தம் நிறைவேற்ற படுவதற்கு முன்பே இவ்வளவு உயிர்கள் பறிக்கபடுகிறது. அமல்படுத்தப்பட்டால் இன்னும் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும். எனவே தமிழக அரசு சட்டமன்றத்தில் இச்சட்டதிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டில் விவகாரத்தில் எவ்வாறு தமிழகரசு போராட்டங்களை கண்டு பின்வாங்கியதோ அதே நிலை 
குடியுரிமை சட்டத்திலும் ஏற்படும்.


தனக்குப் பின்னால் பாரதிய ஜனதா இல்லை என்று கூறிக்கொள்ளும் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்தில் மத்திய அரசு பின்வாங்காது என்று கூறுவதிலிருந்தும் அதனை கமலஹாசன் இதுதான் சரியான வழி என்றும் கூறுவது.


16 வயதினிலே திரைப்படத்தில் சப்பானி கதாபாத்திரம் பரட்டைக்கு முதுகுபிடித்து விடுவதை போல கமலஹாசனும், ரஜினிகாந்த்ம் மத்திய அரசுக்கு இந்த பணியை செய்கிறது என்பதை அப்பட்டமாக தெரிவதாக கூறினார்.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி