திருத்துறைப்பூண்டியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் 67வது பிறந்த தினவிழா
திமுக தலைவர் மு க ஸ்டாலின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 15 குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் தலைமையில் மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திமுக சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் அவசர சிகிச்சை மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் கார்த்தி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.
செய்தியாளர் பாலா திருத்துறைப்பூண்டி
Comments