பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி கல்லூரி வளாகம் முன்பு வாயில் முழக்க ஆர்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச் சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி கல்லூரி வளாகம் முன்பு வாயில் முழக்க ஆர்பாட்டம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழகமாதிரி கல்லூரியில் 36 கெளரவ விரிவுரையாளர்கள் ,5 அலுவலக பணியாளர்கள் குறைந்த தொகுப்பூதியத்தில் கடந்த 2011-ல் கல்லூரி துவங்கியதில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த கடந்த ஆண்டு தமிழக முதல்வர் சட்டசபையில் 110 - விதியின் கீழ் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூலம் இயங்கிவரும் உறுப்புகல்லூரிகள் அனைத்தும் அரசு கல்லூரியாக மாற்றம் செய்து அறிவித்ததை தொடர்ந்து புதிய அரசு கல்லூரிகளுக்கு  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் கூடுதல் பேராசிரியர்களை பணியிட நிரவல் மூலம் பணியமர்த்தப்பட்டனர். கெளரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் இதனை கண்டித்தும் தற்போது பணியில் உள்ள கெளரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட கௌரவவிரிவரையாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கெளரவ விரிவுரையாளர்கள் கல்லூரி முன்பு ஆர்பாட்டம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி