வரும் 14 ஆம் தேதி ‘மாஸ்டர்’ படத்தின் முதல் பாடலான ‘ஒரு குட்டிக்கதை’ வெளியாகிறது
மாஸ்டர்’ படக்குழுவின் காதலர் தின பரிசு - ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் வெளியீடு
காதலர் தின பரிசாக விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சியில் நடைபெற்று வந்தது. ‘மாஸ்டர்’ படக்குழு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரது ட்விட்டர் பக்கத்தில் வரும் 14 ஆம் தேதி ‘மாஸ்டர்’ படத்தின் முதல் பாடலான ‘ஒரு குட்டிக்கதை’ வெளியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விஜயின் புதிய தோற்றத்திலான ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Comments