சென்னையில் ஏப்.10-ந் தேதி அரசு ஊழியர்கள் பேரணி
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்.10-ந் தேதி அரசு ஊழியர்கள் பேரணி
திண்டுக்கல்லில் அரசு பணியாளர் சங்க மத்திய செற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமீப காலமாக அரசு பணி நியமனங்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகிறது. பணி நியமனங்களில் ஆட்சியில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உண்டு. நம் நாட்டில் சட்டத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 10-ந் தேதி சென்னையில் 50 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி மாபெரும் பேரணி நடத்த உள்ளோம்.
லோக்ஆயுக்தா வரம்பிற்குள் பணி நியமனம், பதவி உயர்வை சேர்க்க வேண்டும், பட்ஜெட் கூட்டத்தொடரில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
Comments